கைபேசிக் கடைகளில் நூதனமாகத் திருட்டு

கண்டி மாவட்டம், அலிமுடுக்கு பகுதியில் உள்ள இரண்டு கைபேசி கடைகளுக்கு வாடிக்கையாளர் போல் நடித்து சென்று, ஒரே நாளில் இரண்டு பெறுமதிமிக்க கைபேசிகளை திருடிச் சென்ற நபர் குறித்து கண்டி ​பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (08) அன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கைபேசிகளை திருடும் காட்சிகள் அங்குள்ள பாதுகாப்பு கேமராக்களில் (CCTV) மிக தெளிவாக பதிவாகியுள்ளன.

சந்தேக நபர், கைபேசி ஒன்றை கொள்வனவு செய்யப் போவதாக கூறி, ஒரே நாளில் குறித்த இரண்டு கடைகளுக்கும் சென்றுள்ளார். அங்கு கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கைபேசிகளை மிக குறுகிய நேரத்தில் திருடிக்கொண்டு, எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தப்பிச் சென்றுள்ளார்.

அலிமுடுக்கு பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இந்தத் திருட்டு சம்பவங்கள், அப்பகுதி வர்த்தகர்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் சனிக்கிழமை (09) அன்று கடை உரிமையாளர்களால் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பொலிஸார் கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ காட்சிகளில் உள்ள நபரை அடையாளம் காண முடிந்தாலோ அல்லது இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கண்டி பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

death

யானை தாக்கியதில் செட்டிகுள குடும்பஸ்தர் பலி!

July 26, 2026

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ

tea

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

July 26, 2026

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர்

dds

யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா முறைமை மீண்டும் அமுல்

July 26, 2026

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும்

45

ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்களின் பட்டியலில் இலங்கை பெண் வைத்தியர்

July 26, 2026

உலகளாவிய ஹெபடைடிஸ் ஒழிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்கள் பட்டியலில், இலங்கையின் தேசிய பால்வினை

3

த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

July 26, 2026

நெல்லை: தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க

2

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி – திருமாவளவன்!

July 26, 2026

சென்னை: இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக்

hariny

இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள்

July 26, 2026

இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான்

don

கூகுள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம் : ட்ரம்ப்

July 26, 2026

குள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம்

feve

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை!

July 26, 2026

ய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர்

bs

சிரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : 35 பேர் பலி – 30 பேர் காயம்

July 26, 2026

சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த

jail1

அபராதம் செலுத்த பணமின்றி சிறையில் வாடும் 3 ஆயிரம் கைதிகள்

July 26, 2026

தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த

kil

கிளிநொச்சியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

July 26, 2026

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின்