நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அந்த வேளையில் கடற்கரையில் உயிர்ப்பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த ஏத்துக்கால பொலிஸ் உயிர்ப்பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் குழுவினர் குறித்த இருவரையும் மீட்டு, ஆரம்ப முதலுதவி அளித்து மேலதிக சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
விபத்துக்குள்ளான நபர்கள் 15 மற்றும் 42 வயதுடைய ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.