கண்டி – கடுகஸ்தோட்டை, கூடுவலை பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீ விபத்து காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியின் கூடுவலை பகுதிக்கு அருகிலான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டி மற்றும் மாத்தளை தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த தீயணைப்புக் குழுவினர், தீவிரமாகச் செயற்பட்டு தீயைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இவ்விபத்தில் உயிரச்சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கடுகஸ்தோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.