கனடா ஒட்டாவாவில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்: இரு சிறு பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை

கனடாவின் ஒட்டாவா (Ottawa) பகுதியில் தந்தை ஒருவர் தனது இரு சிறு பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ள அதிர்ச்சி உட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஒட்டாவா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒட்டாவாவின் ஃபின்ட்லி கிரீக் (Findlay Creek) பகுதியில் உள்ள மாண்டேவில்லா கிரசண்டில் (Mandevilla Crescent) அமைந்துள்ள வீடொன்றில் வசிப்பவர்களின் நலம் குறித்து விசாரிப்பதற்காக (Wellness check) திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். இதன்போது, அந்த வீட்டிற்குள் 7 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் இருவரும் அவர்களது தந்தையின் வீட்டிற்குள்ளேயே சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், கெம்ப்ட்வில் (Kemptville) பகுதிக்கு அருகிலுள்ள 416 ஆம் இலக்க நெடுஞ்சாலையோர வாகன நிறுத்துமிடம் ஒன்றில், எரியூட்டப்பட்ட வாகனத்திற்குள் இருந்து அந்தத் தந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இக்குற்றச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரோகுவாரிஸ் (Iroquois) பகுதியில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்தும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். எனினும், அந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் மிகவும் சிக்கலானது என விவரித்துள்ள அதிகாரிகள், தற்போதைய நிலையில் பொதுமக்களுக்கு வேறு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏதேனும் விபரங்கள் தெரிந்தவர்கள் 613-236-1222 (ext. 5943) என்ற இலக்கத்தின் ஊடாக ஒட்டாவா பொலிஸ் கொலைக் குற்றப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்