சென்னை:
எடிசன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மேலாளர் மீது முன்வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டு அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கத்தி’ திரைப்படத்தின் போது அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா மீது எழுந்த ஈழத்தமிழர் எதிர்ப்புப் புகார்கள் காரணமாக, தான் அந்தப் படத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.
அப்போது, தற்போது முதலமைச்சர் வேட்பாளராகக் களம் கண்டுள்ள விஜய்யின் மேலாளர், தன்னைச் சந்தித்துப் பெரிய தொகையை நன்கொடையாகத் தர முன்வந்ததாகவும், கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாகனங்கள் வாங்கித் தருவதாகப் பேரம் பேசியதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஆனால், எதற்கும் மசியாமல் தான் போராட்டத்தைத் தொடர்ந்ததாகக் கூறிய அவர், இதுவரை யாரிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காத அரசியல்வாதியாகத் தான் திகழ்வதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் கடந்த கால விவகாரம் குறித்து வேல்முருகன் பேசியுள்ளது தவெக மற்றும் திமுக கூட்டணி வட்டாரங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
#Velmurugan #TVK #Vijay #KaththiMovie #LycaProductions #PoliticalControversy #BreakingNews #TamilNaduPolitics #VijayManager #BribeAllegation #EdisonAwards #TNElection2026 #May4 #TamilNaduNews #VaazhuvurimaiKatchi #May1 #CinemaPolitics #PoliticalDebate #VijayForCM #ThalapathyVijay