தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா திசாவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் (SDIG) கூற்றுப்படி, சந்தேக நபரும் அவரது மனைவியும் நேற்று (24) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து மூலம் பயணிப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் வாலாணை ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது, பிரதான சந்தேக நபர் முகக்கவசம் (Face mask) அணிந்திருந்ததாகவும், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று ஆடை அணிந்து தனது அடையாளத்தை மறைத்திருந்ததாகவும் (Disguised) தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் போது, தான் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று, அங்குள்ள தனது மற்றுமொரு இரு பிள்ளைகளைப் பார்த்துவிட்டு பின்னர் காவல்துறையினரிடம் சரணடையத் திட்டமிட்டிருந்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாலாணை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகலவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த வெற்றிகரமான கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததுடன், கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து தப்பியோட முயன்றிருந்தமையும் புலனாய்வாளர்களின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பின்னணி:

தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வழங்கிய தொலைபேசி தகவலின் அடிப்படையிலேயே தெல்தெனிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பூட்டப்பட்டிருந்த வாகனத்தின் கதவை பலவந்தமாகத் திறந்து சடலத்தை மீட்டனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் எனவும், அவர் அம்பாறை மருத்துவமனையில் பௌதிக சிகிச்சை நிபுணராக (Physiotherapist) கடமையாற்றியவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் காதலனே அவரது சடலத்தை வாகனத்தில் கொண்டு வந்து அவ்விடத்தில் கைவிட்டுவிட்டு தப்பியோடியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டியிருந்தன.

மேலும், குறித்த பெண் கடந்த ஜூன் 3 முதல் ஜூன் 16ஆம் தேதி வரை நுவரெலியாவில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. அந்த காலகட்டத்தில் அப்பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்தபோது, அவரது காதலன் அவரைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியிருந்தன.

தெல்தெனிய காவல்துறையினருக்கு ஆரம்பத்தில் தொலைபேசி மூலம் தகவல் வழங்கிய நபர் இக்கொலையுடன் தொடர்புடைய காதலன் தான் என்பதை உறுதிப்படுத்திய காவல்துறையினர், எனினும் அவர் தொடர்ந்து தலைமறைவாகி தப்பித்து வந்த நிலையிலேயே தற்போது யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

729481106_1021088533701986_4482724275745954913_n

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக

730515905_1623541362526678_1589963721921684927_n

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

June 24, 2026

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம்

Rajitha

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்ப்டவில்லை – சட்டத்தரணி ரனித்தா

June 24, 2026

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின்

730451457_856458137519480_6962660640323909533_n

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

June 24, 2026

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக்

727788199_1687261052550087_6943194283308762826_n

பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

June 24, 2026

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட

mull

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

June 24, 2026

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக

strike

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

June 24, 2026

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்

Dengue

14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

June 24, 2026

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர்

Sarana

முன்னாள் அமைச்சர் சிறைச்சாலை அலுவலகங்களை சுத்தம் செய்கிறார்!

June 24, 2026

வெலிக்கடை சிறைச்சாலையின் அலுவலங்களை சுத்தம் செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை