ஐரோப்பாவில் மண் சரிவில் சிக்கிய 2 இலங்கைத் தொழிலாளர்கள்; ஒருவர் சடலமாக மீட்பு!

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் Găneasa பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய இரண்டு இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 46 மற்றும் 48 வயதுடைய இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் மீது, ஆறு மீட்டர் ஆழமுள்ள குழியின் மண் திட்டு திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது.

மண் சரிவு ஏற்பட்டதும் இருவரும் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

மீட்புப் பணியின் போது மண் மீண்டும் சரிந்து மீட்புப் படையினருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவியதால், குழியின் பக்கவாட்டுச் சுவர்களைப் பலப்படுத்திய பின்னரே தீயணைப்புப் படையினர் மிகக் கவனமாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.

சுமார் 6 மணி நேரத் தீவிரப் போராட்டத்திற்குப் பின்னர் இடுப்பளவு மண்ணில் புதையுண்டிருந்த முதலாவது தொழிலாளி எவ்வித காயங்களுமின்றி சுயநினைவுடன் மீட்கப்பட்டார்.

அவர் கடும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மேலும் ஐந்து மணி நேரத் தேடுதலுக்குப் பின்னர் மண்ணுக்குள் புதையுண்டிருந்த இரண்டாவது தொழிலாளியை மீட்டபோது அவர் உயிரிழந்திருந்தார்.

பாரிய கொன்கிரீட் பலகை ஒன்று அவர் மீது விழுந்து நசுக்கியதோடு, அதன் மேல் மண்ணும் சரிந்து மூடியதாலேயே அவரால் உயிர் பிழைக்க முடியாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மணி நேரத்திற்கும் மேலான மீட்புப் போராட்டத்தின் இறுதியில் இலங்கைத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட இச்சம்பவம் புலம்பெயர் இலங்கையர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ra

அரசியல் குழு மோதல்: பிரித்தானியாவை சர்ச்சைகளுக்குரிய களமாக மாற்றக்கூடாது – அரசியல் விமர்சகர் ரகிப் எஹ்சான்

November 22, 2026

கிழக்கு லண்டனில் பங்களாதேஷைச் சேர்ந்த போட்டி அரசியல் குழுக்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல்கள், பிரித்தானியாவில் சமூக ஒருங்கிணைப்பு மற்றும்

den

டெங்கு பரவல் வவுனியாவில் அதிகரிப்பு!

November 22, 2026

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத்

cyb

இலங்கையுடன் இணையும் அமெரிக்கா; இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்தத்திட்டம்?

November 22, 2026

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை

Pra

இலங்கையின் புனிதப் பிரதேசத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – பிரபாத் சந்திரகீர்த்தி

November 22, 2026

த்த மரபுரிமைகளையும் தொல்பொருள் பெறுமதிகளையும் பாதுகாத்து அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புனிதப்

vi

இலங்கை எப்படி இருக்கிறது? விண்வெளியிலிருந்து நாசா வீரர் புகைப்படம் பகிர்வு!

November 22, 2026

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட இலங்கையின் கண்கவர் புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன்

WhatsApp Image 2026-11-21 at 13.50.11

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேட்பாளருக்கு பிரிட்டன், பிரான்ஸ் வீட்டோ எதிர்ப்பு!

November 22, 2026

சூடானில் இடம்பெறும் கொடூரங்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரைத்

gelem

ரஷ்ய ஜனாதிபதி ஒரு ‘கொலையாளி’ – உக்ரைன் ஜனாதிபதி

November 22, 2026

சீனாவில் இந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தனது “நண்பர்” என அமெரிக்க ஜனாதிபதி

rum

ஐரோப்பாவில் மண் சரிவில் சிக்கிய 2 இலங்கைத் தொழிலாளர்கள்; ஒருவர் சடலமாக மீட்பு!

November 22, 2026

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் Găneasa பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய இரண்டு இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில்

Parliament

பாராளுமன்றில் செலவுத் தலைப்புகள் நிறைவேற்றம்!

November 22, 2026

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று(21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம்

IMG_2342

பிள்ளையானிற்கு விடுதலை இல்லை

November 21, 2026

பிள்ளையானை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும்

IMG_2341

மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம்

November 21, 2026

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு

IMG_2325

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல்

November 21, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதல்