ஹைவே 27 மற்றும் அல்பியன் (Highway 27 and Albion) பகுதியில் உள்ள எட்டோபிகோ பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட ‘நான்காம் நிலை’ (four-alarm) பெரும் தீ விபத்துக்கான காரணத்தை தீயணைப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.
இரவு வேளையில் எட்டோபிகோ பட்டாசு கடைக்குள் கார் ஒன்று மோதியதை அடுத்து, டொராண்டோ தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயுடனும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுடனும் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஹைவே 427 மற்றும் அல்பியன் வீதிக்கு (Albion Road) அருகில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட இந்த நான்காம் நிலை தீ விபத்து குறித்து நள்ளிரவு 1 மணிக்கு சற்று முன்பதாக தீயணைப்புப் படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட காணொளிகளில், தங்களைச் சுற்றிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய நிலையிலும், தீயணைப்பு வீரர்கள் கடுமையான தீப்பிழம்புகளுக்கும் புகை மூட்டத்திற்கும் மத்தியில் போராடி தீயை அணைப்பதைக் காண முடிந்தது.
தீ முற்றாக அணைக்கப்பட்டுவிட்டதாகவும், காயங்கள் எதுவும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ அணைக்கப்பட்ட பின்னர், கடைக்குள் கார் ஒன்று இருப்பதைக் காண முடிந்தது.
விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாக டொராண்டோ பொலிஸார் சிபி24 (CP24) ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.