மகிந்த ராஜபக்சவுக்கு நாளைய யுத்த வெற்றி கொண்டாட்டத்திற்கு அழைப்பில்லை?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நாளையதினம் (19) நடைபெறவுள்ள தேசிய வெற்றி தினக் கொண்டாட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இதுவரை எந்த அழைப்பிதழும் வரவில்லை என அவரது ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்தார். பத்தரமுல்லவில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நாளை (19) “தேசிய வெற்றிக் கொண்டாட்டம்” நடைபெற உள்ளது. இந்தநிலையில், 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் உபாலி பன்னிலகே கூறியது பொய்யானது என்றும் மனோஜ் […]

எங்களது தமிழ் சகோதர சகோதரிகளுடன் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் நாம் துணையாக நிற்போம் – பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்

மனித உரிமைகளுக்கான போராட்டத்திலும், இனப்படுகொலை மறுப்புக்கு எதிராகவும் எங்களது தமிழ் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம் என பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. தமிழ் இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதிலும், வரலாற்றை மறைக்க முயல்பவர்களுக்கு எதிராக உண்மையை பாதுகாப்பதிலும் நாங்கள் தமிழ் சமூகத்துடன் இணைந்து நிற்கிறோம். நினைவேந்தல், நீதிக்கான தேவை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தொடர்ச்சியான அழுத்தம் ஆகியவற்றின் அடையாளமாக, சிங்குவாக்குசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தை […]

யுத்த வெற்றியை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் – மஹிந்த ராஜபக்ஷ

யுத்த வெற்றியை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த தினத்தை ஒருபோதும் மறக்ககூடாது. இன்று பிளவுபடாத ஒரே நாடாக உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும். மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கமாகவும் உள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்த, இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் திங்கட்கிழமை (18) நடைபெற்றது. இந்நிழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தம் முடிவடைந்த […]

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, நீதியான மற்றும் நிலையான அரசியல் தீர்வொன்றை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம்-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, நீதியான மற்றும் நிலையான அரசியல் தீர்வொன்றை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம்.என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நியூ ஜெர்சி மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் அமெரிக்கர்களுடன் இணைந்து, 17 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட அல்லது பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நானும் நினைவு கூருகிறேன். இந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், பாதிக்கப்பட்டவர்களை நாம் […]

குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. குருமன்வெளி வட்டார உறுப்பினர் அ.பத்மதேவு தலைமையில் நடைபெற்ற இந்நாளில், இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் “முள்ளிவாய்க்கால் நினைவு நாள் – மே 18”, “தமிழின அழிப்பு நாள்” ஆகிய வாசகங்கள் தாங்கிய பிரதான பதாகை […]

நாளை தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு

யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை நினைவு நிகழ்வில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய […]

உரும்பிராயில் பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (18) திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொன். சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களில் 100 பேருக்கு அரிசிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் ஈழ […]

கடற்கரைச்சேனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் விதமாக 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பிரதேசத்தில் இன்று (18) நடைபெற்றது. இந்நிகழ்வை கடற்கரைச்சேனை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மூதூர் பிரதேச சபை தவிசாளர் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த நினைவேந்தல் வேளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

நீதியின் கதவுகள் ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது – தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஆதங்கம்

மக்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதே தவிர, நீதியின் கதவுகள் ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது என்பதே பட்டறிவு அனுபவமாக காணப்படுகிறது. உலகம் அநீதியாளர்களின் நண்பராகவே காணப்படுகிறது தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் தெரிவித்துள்ளது. மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (18) அனுஷ்டிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு, மன்னாரில் இயங்கி வரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, கடந்த 70 ஆண்டுகளாக தன்மானம், சுயமரியாதை […]

“முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்!” – ஈழத்தமிழர்களுக்காக முதலமைச்சர் விஜய் உருக்கமான பதிவு!

சென்னை: “முள்ளிவாய்க்கால் நினைவுகளை நாம் எப்போதும் இதயத்தில் ஏந்துவோம்; கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காகத் தவெக அரசு எப்போதும் துணை நிற்கும்” என்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளப் பக்கத்தில் மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத பெரும் துயரமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (மே 18) உலகெங்கும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. […]