தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் விதமாக 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பிரதேசத்தில் இன்று (18) நடைபெற்றது.
இந்நிகழ்வை கடற்கரைச்சேனை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூதூர் பிரதேச சபை தவிசாளர் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த நினைவேந்தல் வேளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.