வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் வெள்ளையும் பழுப்பு நிறமும் கலந்த சேலை அணிந்திருந்ததாகவும், அவரிடம் பச்சை நிறப் பை ஒன்று இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இறந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.