ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் வெள்ளையும் பழுப்பு நிறமும் கலந்த சேலை அணிந்திருந்ததாகவும், அவரிடம் பச்சை நிறப் பை ஒன்று இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இறந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே மோதல் வெடித்தது. ஹங்கேரியில் நடைபெற்ற சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 1-1 என சமநிலையில் முடிய, பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என வென்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பிஎஸ்ஜி அணி கிண்ணம் வென்றுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின் போது இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. […]

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும் முகமாகவும் 5 அதிநவீன மேமோகிராபி (Mammography) இயந்திரங்களை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார சேவையின் பெளதீக வளங்களை அதிகரித்து, பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்கும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களிடையே மிகவும் […]

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கியவாறு (Wheelie) அச்சுறுத்தும் வகையில் வாகனங்களைச் செலுத்திய 6 இளைஞர்கள் அதிகாலை கதான பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமளவிலான சத்தத்தை எழுப்பி, வீதியில் சென்ற ஏனைய வாகனங்களுக்குப் இடையூறு விளைவித்தும், சக ஓட்டுநர்களைப் பீதியடையச் செய்தும், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் த்ரீவீலரை (Three-Wheeler) செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் […]

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்தனர். இந்நிலையில் வடமாகாண ஆளூநர் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போது, குறித்த வீதியினை 24 மணி நேர போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் […]

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே தோன்றும். ஆனால் அரிதாக ஒரே மாதத்தில் 2 பௌர்ணமிகள் தோன்றினால், அந்த 2-வது பௌர்ணமி நிலவே ‘நீல நிலா’ எனப்படுகிறது. சந்திரனின் ஒரு முழு சுழற்சி காலம் 29.5 நாட்களாகும். 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நிகழ்கிறது. கடந்த 1-ஆம் திகதி முதல் பௌர்ணமி தோன்றியதால் […]

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மிசிசாகா சாலைக்கு (Mississauga Road) அருகேயுள்ள நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிச் செல்லும் கலெக்டர் பாதைகளில் (eastbound collector lanes) இரவு 8:15 மணியளவில் இந்த மூன்று வாகன விபத்து நிகழ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட புதிய தகவலில், வாகனங்கள் ஒன்றில் பயணித்த 78 வயதான பெண் பயணி ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் […]

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற நபர் ஒருவர், வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலை சுமார் 1:19 மணியளவில் ஓல்ட் பார்க் சாலை (Old Park Road) மற்றும் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட் பகுதியில் இந்த விபத்து நடந்ததாகத் டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு […]

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச் சேர்ந்த ஒரு நபர், மிசிசாகா (Mississauga) பகுதியில் மீண்டும் அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதாகப் (Stunt Driving) பாதுகாப்புப் சாலைகள் குழு (Safer Roads Team) புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். மே 23, 2026 அன்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில், வின்ஸ்டன் சர்ச்சில் பவுலவர்டு (Winston Churchill Boulevard) மற்றும் அர்ஜென்டியா சாலை […]

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு போக்கில் செயற்பட்டுள்ளார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். கடந்த காலத்தில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டதன் விளைவுதான், தொடர்ந்தும் படுகொலைகள் நடைபெற்றதற்குரிய காரணமாக இருந்தது. ஆகவே, குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமாக, இந்த அரசாங்கம் தாங்கள் சரியான பாதையில், சரியான […]