கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று(31.05.2026) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று(30) மாலை இடம்பெற்ற இந்தத் துரதிர்ஷ்டவசமான அனர்த்தத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னரே, இன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹுங்கம பொலிஸாரின் தகவல்களின்படி, உயிரிழந்த மூன்று மாணவர்களும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 12, 17 மற்றும் 18 வயதுடைய […]
ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். நேற்று (30.05.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல்வாதிகளின் அரசியல் நலன் கருதி பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைப்பதும் அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதையும் ஊடக […]
யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவம் 1981ஆம் ஆண்டு இதே திகதி (31) இதே கிழமை (ஞாயிற்றுக்கிழமை), நள்ளிரவில் நடந்தது. இது, காலத்தால் மறையாதது, மறக்கமுடியாதது! யாழ். பொது நூலகம் 1981ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி நள்ளிரவு வன்முறைக் கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. நூலகத்தில் மட்டுமன்றி, இரவோடு இரவாக பல இடங்களில் தீ […]
நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சூயிரல் ஜெனரல் சாய் முரளி ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர். இதனையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தன்சல்’ நிகழ்வும் அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாகவிகாரையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வுகளில் நாகவிகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பிற மதத் தலைவர்கள், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண […]
தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் குற்றம் சாட்டி, சுதந்திர வழக்கறிஞர்கள் (Free Lawyers) அமைப்பு ஒரு பத்திரிகைச் செய்தியை வெளியிட்டுள்ளது. டெண்டர் நிபந்தனைகளை மீறி மேற்கொள்ளப்படும் இந்தச் செயல்முறை, ஒரு நிலக்கரி மோசடி மற்றும் பலவந்தக் கொள்ளை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. தரஞ்சோத் ரிசோர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ( Taranjot Resource (Pvt) Ltd ) நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட 59,766,000 […]
வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர் தரக்குறைவாக மதிப்பிடுவதையே பிரதிபலிக்கின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விமர்சித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மாகாண சபை தேர்தல் குறித்து ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்து, தமிழ் […]
சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில் தனது நாட்டிற்குத் திரும்ப அழைத்து வந்துள்ளது. இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 34 வயதுடைய பெண் ஒருவர் மீது, அவுஸ்திரேலிய பொலிஸார் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியா வந்தடைந்த அந்தப் பெண், எதிர்வரும் வியாழக்கிழமை மெல்பர்ன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தது […]
தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்
தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அதற்கான பிரதிகளில் ஞாயிற்றுகிழமைகளில் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடவும், நிபந்தனையுடனும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெசாக் தினத்தினை முன்னிட்டு, தையிட்டி விகாரையில் நேற்று(30.05.2026) வழிபாடு நடைபெற்ற நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். […]
காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன் இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவு கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.அகிலன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த […]
இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30) இடம்பெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 18 வயதான யான்சி என்பவரே உயிரிழந்துள்ளார். இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியுள்ளது. இந்த […]