தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, நீதியான மற்றும் நிலையான அரசியல் தீர்வொன்றை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம்.என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
நியூ ஜெர்சி மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் அமெரிக்கர்களுடன் இணைந்து, 17 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட அல்லது பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நானும் நினைவு கூருகிறேன்.
இந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், பாதிக்கப்பட்டவர்களை நாம் கௌரவிப்பதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து தேடி வரும் மக்களுடன் துணையாக நிற்கிறோம்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, நீதியான மற்றும் நிலையான அரசியல் தீர்வொன்றை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம்.