முதல் முறையாக பிரதேசமக்கள் தமது சுய பிரயத்தனத்தினால் , முள்ளிவாய்க்கால் படுகொலைகள் – இனஅழிப்பு மற்றும் தொடரும் தேசிய இன ஒடுக்குமுறையை நினைவு கொள்ளும் விதமாகா முள்ளிவாய்க்கால் உரிமை கஞ்சி நிகழ்வை , புனித சூசையப்பர் ஆலயத்துக்கு முன்னால் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
பிரதேசசபை துணைத்தலைவர் லெனின் ரஞ்சித், பிரதேசசபை தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, தீவக மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி இளம்பிறையன் , போன்றவர்களும் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்வை, கத்தோலிக்க திருச்சபையின் கன்னியர் சபை துறவி ஒருவர் விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.