உலகம் தழுவிய ரீதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – சட்டத்தரணி ஜோதிலிங்கம்

அரசியல் கைதிகளின் விவகாரத்தை அடையாள ரீதியாக செய்யாமல், உலகம் தழுவிய ரீதியில் செய்ய வேண்டும். ஏனெனில் தேசிய இனப் பிரச்சினையை என்பது சாராம்சத்தில் உள்நாட்டு பிரச்சினை அல்ல. இதுவொரு சர்வதேச பிரச்சினை என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று(31.01.2026) மாலை யாழில் நடைபெற்ற “நீதிக்கான சாட்சி” என்ற நூதன முறையிலான போராட்டத்தில் கலந்துகொண்டு நீதிக்கான சாட்சி உரைக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,அரசியல் கைதிகளின் போல சொந்த நலனுக்காக சிறைகளுக்குள் சென்றவர்கள் அல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையிலேயே அவர்கள் இவ்வாறு சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர்.

அவர்கள் அரசியல் கைதிகள் என்பதை இந்த அரசை நாங்கள் முதலில் ஏற்க செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் மாத்திரம் அல்ல இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியல் கைதிகள் என்று ஏற்காத நிலையே காணப்படுகிறது.

இந்த அரசாங்கத்தின் நீதி அமைச்சர் கூட ஒரு தடவை அரசியல் கைதி என்று எவரும் இல்லை என்று கூறியுள்ளார். இந்தக் கூற்றுக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது தமிழ் மக்களின் பொது விவகாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொண்டு அதனை தமிழ் மக்கள் பொறுப்பெடுக்க வேண்டும்.

அரசியல் தலைமைகள் இதனை பொறுப்பெடுக்க வேண்டும். துரதிஷ்டவசமாக எங்களுடைய அரசியல் தலைமைகள் இதனை பேசுவதையே அதிகமாக நிறுத்திக் கொண்ட நிலை தான் காணப்படுகின்றது.

அவர்கள் நினைத்திருந்தால் வலிமையாக செயல்பட்டு இந்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அந்த முயற்சியை ஒரு வலுவானதாக செய்யவில்லை.

ஆகவே, அதற்காக நாங்கள் ஒரு அழுத்தத்தினை வழங்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்த அரசானது அச்சப்படுகின்ற ஒரே ஒரு விடயம் தமிழ் மக்களுடைய உலகளாவிய ரீதியிலான அரசியல் போராட்டம் தான்.

இதற்கு உதாரணம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி குறித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டமே. அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபோது தமிழ்நாட்டில் அது தொடர்பான போராட்டம் வளர்ந்தது. தமிழ்நாட்டில் இவ்வாறு வளர்ந்த போது புலம்பெயர் நாடுகளில் அந்த போராட்டம் வளர்ந்தது.

அன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து கொண்டிருந்த ஒரு காலம். இதன்போது உடனடியாகவே இந்திய தூதுவர் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவை அழைத்து இந்தப் போராட்டத்தை உடனடியாக நிறுத்துங்கள் என கூறியிருந்தார். ஏனென்றால் இது எங்களுக்கு பிரச்சினை என இந்திய தூதவர் கூறியிருந்தார்.

ஆகவே தமிழ் மக்களுடைய உலகளாவிய அரசியல் போராட்டத்திற்கு அரசு பயப்படுகின்றது.

காணிப் பிரச்சினையாக இருக்கலாம், அல்லது இன்று நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புகளாக இருக்கலாம், அரசியல் கைதிகளின் விடயமாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோருடைய விடயமாக இருக்கலாம் அனைத்துப் பிரச்சினைகளையும் உலகம் தழுவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு நாங்கள் உலகம் தழுவிய ரீதியில் நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால் முதலில் தாயகத்தில் ஒரு கொதிநிலை வேண்டும். தாயகத்தில் கொதிநிலை உண்டானால் தான் தமிழகத்தில் கொதிநிலை உண்டாகும்.

தமிழகத்தில் கொதிநிலை உண்டானால் தான் உலகம் தழுவிய ரீதியில் கொதிநிலை உண்டாகும். ஆகவே தாயகத்தில் ஒரு கொதிநிலையை எவ்வாறு நாங்கள் உண்டாக்குவது என்பதுதான் இங்கு விடயமாக காணப்படுகின்றது. இன்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அரசியல் கட்சி இல்லை. இருப்பதெல்லாம் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு குழு தான்.

அரசியல் கட்சி என்றாலே நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்க்கின்றோம். இன்றைக்கு ஒரு அரசியல் கட்சி இல்லாத மக்கள் கூட்டமாக தான் நாங்கள் இருக்கின்றோம்.

இன்று எமக்கு அரசியல் கட்சி தேவை இல்லை. தமிழ் மக்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் உலகளாவிய ரீதியில் கையாளுகின்ற ஒரு அரசியல் இயக்கமே தேவைப்படுகின்றது.

அந்த அரசியல் இயக்கத்தை இன்று கட்டி எழுப்ப வேண்டிய ஒரு தேவையும் முக்கியத்துவமும் இன்று இருக்கின்றது என வலியுறுத்தியுள்ளார்.

Chandrika-buddhism

மகா சங்கத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் பௌத்த மதத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றன: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவசர அறிக்கை!

June 25, 2026

இலங்கையில் பௌத்த மதகுருமார்கள் (மகா சங்கத்தினர்) சிலரின் தவறான ஒழுக்கக் கேடுகள் மற்றும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், பௌத்த மதத்தின் மீதும்

GSWT7ZKVVNFCNIZMQ22CLBU2GQ

ஒட்டாவா கத்திக்குத்துச் சம்பவம்: இரண்டு சிறுவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு! பொலிஸார் அதிரடி நடவடிக்கை

June 25, 2026

ஒட்டாவா (CTV News Ottawa): கடந்த மே மாதம் 30 ஆம் தேதி இரவு மூனிஸ் பே பூங்காவில் (Mooney’s

crime

கனடா: பாரி நகரில் பயங்கரம்! மனைவியைச் சுட்டுக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை; பொலிஸார் அதிர்ச்சி விபரம் வெளியீடு

June 25, 2026

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பாரி (Barrie) நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்ட

world cup canada

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்களின் விசா விண்ணப்பங்களை அதிரடியாக நிராகரித்தது கனடா- இலங்கை விண்ணப்பங்கள் 100 வீதம் நிராகரிப்பு

June 25, 2026

ஒட்டாவா (CTV News): கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டுப் பொறுப்பில் மிகப்பாரிய அளவில் நடைபெற்று வரும்

gary

கனடா: டொராண்டோவில் மிரட்டிப் பணம் பறிப்பு கும்பல்களுடன் தொடர்பு! வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக நாடுகடத்தல் உத்தரவு 

June 25, 2026

டொராண்டோ (CP24): கனடாவின் டொராண்டோ பெருநகரப் பகுதியில் (GTA) அரங்கேறி வரும் மிரட்டிப் பணம் பறிக்கும் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய

har3

சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்

June 25, 2026

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப்

Fuel_1200px_22_10_17

உலக சந்தையில் எரிபொருள் விலை நிலையற்றே உள்ளது: எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த முடியாது

June 25, 2026

எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. மத்திய கிழக்கில் மோதல் நிலைமை இன்றும் முழுமையாக முடிவுக்கு கொண்டு

socia

தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

June 25, 2026

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல்

images (12)

யாழில் 17 வயது இளம் தவில் வித்துவான் எடுத்த விபரீத முடிவு

June 25, 2026

யாழ்.கோப்பாய் வடக்கை சேர்ந்த 17 வயதுடைய பிரசாந் சச்சின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த கலைஞர் நேற்றையதினம் (24)

anura karunathi

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு

June 25, 2026

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று துறைமுகங்கள் மற்றும்

731147422_994403870139332_1768800714165529515_n

கியூபெக்: மின்னணு கண்காணிப்பு வளையத்தை உடைத்துவிட்டு நபர் தப்பியோட்டம்! கண்டால் நெருங்க வேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கை

June 25, 2026

கியூபெக் மாகாணத்தின் ‘சலாபெரி-டி-வல்லிபீல்ட்’ (Salaberry-de-Valleyfield) பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஸ்காட் மெக்கின்ஸ் (Scott McInnes) என்ற நபர், தனது

10

அரசு கல்லூரிகளில் 43% காலிப்பணியிடங்கள் – மாணவர் சேர்க்கை குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்தரம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை பாமக தலைவர்