சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப் அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி நஜாத் மால்லா எம்’ஜித் மற்றும் யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்த போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துடனான ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு யுனிசெப் நிறுவனம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார். குறிப்பாக தித்வா சூறாவளி அனர்த்தத்தின் போது வழங்கிய உதவிகள், கல்வி மற்றும் ஆரம்ப சிறுவர் பருவக் கல்விச் சீர்திருத்தங்களுக்கான அதன் நீண்டகால பங்களிப்புகள், மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து அவற்றுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட உத்திகள் என்பவற்றுக்காகவும் பிரதமர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

கொள்கைகளை வகுப்பதில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதிலேயே தற்போதைய சவால் உள்ளது. சிறுவர் பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதில் முதன்மைப் பணியாளர்களின் பங்கு முக்கியத்துவமுடையது.

நிறுவன ரீதியான திறன் மற்றும் மனித வளங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும். சிறுவர் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதும் அவசியமாகும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்