‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ தேசிய நாமல் உயன!

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ், இந்நாட்டின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கும் நோக்கில், முதன்முறையாக தேசிய நாமல் உயனவை ‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ பிரகடனப்படுத்தும் நிகழ்வும், அதன் 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அநுராதபுர மாவட்டத்தின் பலாகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 602 ஹெக்டெயார் பரப்பளவைக் கொண்ட தேசிய நாமல் உயன, தேசிய, சமய, சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ரீதியாகப் பல பெறுமதிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான இடமாகும். இதன் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க, புத்தசாசன அமைச்சின் தலையீட்டுடன் இது தேசிய மரபுரிமையாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடையாளப்படுத்தும் பெயர்ப் பலகையை ஜனாதிபதி இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாகத் திறந்து வைத்தார்.

இந்த தனித்துவமான சுற்றாடல் மரபுரிமையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய தேசியப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

ஆரம்பம் முதல் இன்று வரை நாமல் உயனவைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வனவாசி ராகுல தேரர் ஆற்றிய அர்ப்பணிப்பை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் பாராட்டினார்.

நாமல் உயனவின் 35 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை, ‘தேசிய நாமல் உயன கல்விச் சஞ்சிகை’ ஆகியவற்றை வனவாசி ராகுல தேரர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வு தற்போதைய அரசாங்கம் செய்த மிகச்சிறந்த சுற்றுச்சூழல் சேவையாக வரலாற்றில் இடம்பெறும்” என இங்கு விசேட அனுசாசனை உரை நிகழ்த்திய நாமல் உயனவின் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரர் குறிப்பிட்டார்.

இந்தத் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) தேசிய நாமல் உயனவில் நடைபெறவிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதனை ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை மிகவும் பாராட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உள்ள தேவையை இந்நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனைவரையும் ஒன்றிணைத்து தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்குத் தீர்வுகளைக் காண வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய நாமல் உயனவின் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரர்,

1991 மார்ச் 28 ஆம் திகதி நான் இந்த வனப்பகுதிக்கு வந்து மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து இதனை உருவாக்கினேன். அப்போது பிரதேச தேரர்களினதும் மற்றும் மக்களினதும் பல்வேறு விமர்சனங்களையும் அவதூறுகளையும் எதிர்கொண்டேன், எனக்கு எதிராக பத்திரிகைகளில் எழுதினார்கள். ஆனால் நான் தளரவில்லை.

ஆனால் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில், பெர்டி பிரேமலால் திசாநாயக்க எனக்கு உதவினார். இன்று மின்சாரம் கிடைத்திருப்பதற்கு அவரே காரணம். அதேபோன்று, சந்திரிகாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் எனக்கு உதவினார்கள். நான் அவர்களிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் நான் விரும்பும் இடத்திற்குச் செல்வதற்கான கதவுகள் எனக்குத் திறந்தே இருக்கின்றன. ஏனென்றால் நான் யாருக்கும் தீங்கு செய்வதில்லை.

இன்று, உங்கள் பதவிக் காலத்தில், தேசிய நாமல் உயன அமைந்துள்ள பகுதியில் உள்ள வீதிகள் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதற்காக அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். மேலும், தேசிய நாமல் உயனவை இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனம் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கமகெதர

திசாநாயக்க ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ரோஷன் கமகே உள்ளிட்ட அதிகாரிகளும் இப்பணியை நன்கு முகாமைத்துவம் செய்தனர்.இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் இப்பணிக்கு விளம்பரத்தை வழங்கின. அதனையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

தேசிய நாமல் உயன எனது தனிப்பட்ட சொத்தல்ல, நான் இதன் காவலாளி மட்டுமே. எனக்குப் பிறகு இதனை மத்திய கலாசார நிதியத்திடம் ஒப்படைக்கத் தீர்மானித்தேன். அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த இடத்தை கங்காராம விகாரையுடன் இணைத்து, ஜனாதிபதியின் செயலாளர், வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், புத்தசாசன அமைச்சின் செயலாளர் போன்ற பதவிநிலைகளில் இந்தச் செயல்பாடுகளைத் தொடரவும் நான் எண்ணியிருந்தேன். இல்லையெனில், நான் இல்லாத காலத்தில் இது அழிந்துவிடக்கூடும்.

நான் இந்த நாட்டுக்காக ஏதோ ஒன்றைச் செய்திருக்கிறேன். நான் இந்த நாட்டிற்கோ அல்லது இந்த இனத்திற்கோ கடன் பட்டவன் அல்ல. என்னிடமிருந்து நிறைவேற்றப்பட வேண்டிய மிக உயரிய கடமை இதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். அநுராதபுரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள கிராமத்தில் பிறந்தவன் என்ற ரீதியில், இன்று உங்கள் கைகளால் இது தேசிய மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தப்படுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அதேபோல், பலாகல பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பாடசாலைகளும் இரண்டு வைத்தியசாலைகளும் உள்ளன. அந்த மக்களுக்காக, அவற்றில் ஒரு பாடசாலையையும் ஒரு வைத்தியசாலையையும் சகல வசதிகளுடன் கூடிய முழுமையான பாடசாலையாகவும் வைத்தியசாலையாகவும் அபிவிருத்தி செய்து தருமாறு உங்களிடம் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ. செனரத் விக்ரமசிங்க, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் குரே, தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ravikaran11

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

June 19, 2026

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட

725787214_3157095731150321_7205787586037390907_n

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி

June 19, 2026

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

June 19, 2026

யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் தமக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே

726636978_3565023276978557_4923507748374105851_n

மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி!

June 19, 2026

மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை

725611159_1536223961236185_8994205704252386807_n

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

June 19, 2026

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற

teldeniya-hospital

தெல்தெனியவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்: மேலதிக விபரங்களை வெளியிட்டது காவல்துறை

June 19, 2026

தெல்தெனிய போதனா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் காவல்துறை மேலதிக விபரங்களை

Kalpitiya-clash

கற்பிட்டி பகுதியில் காவல்துறை – விமானப்படை இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் விமானப்படை தளபதி

June 19, 2026

கடந்த 2026 ஜூன் 17 அன்று கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் (Kalpitiya firing range) குண்டு செயலிழக்கச்

727288129_1634809484246428_3483563959969194747_n

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடவுள்ள நீதியமைச்சர் – உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்கின்றோம்” சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்று செம்மணியில் மாபெரும் போராட்டம்

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படம் வைக்கப்பட்டு செருப்பு மாலை

June 19, 2026

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படம் வைக்கப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

gaje

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

June 19, 2026

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற

arrestt

கடத்தல் திட்டத்துடன் தொடர்புடைய மார்க்கம் மிரட்டிப் பணம் பறித்தல் விவகாரம்: மூவர் கைது

June 19, 2026

மார்க்கம் (Markham) பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றைத் தொடர்ந்து, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் மீது யோர்க்

726527369_981914391375336_6986041568040849432_n

எட்மண்டன் காவல்துறை $50,000 பெறுமதியான திருடப்பட்ட பொருட்களை மீட்டது: ‘ரீ-வின்னிங்’ விசாரணையில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

June 19, 2026

இணையத்தில் விற்பனைக்காக ஏமாற்றுத்தனமாகப் பட்டியலிடப்பட்டிருந்த இழுவை வாகனம் (Trailer) குறித்த விசாரணையைத் தொடர்ந்து, எட்மண்டன் காவல்துறை சுமார் $50,000 மதிப்பிலான