முள்ளியவளை கணுக்கேணிக் குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரமைப்பிற்கு ரவிகரன் எம்.பி நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலைச் சீரமைப்பதற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 350, 000 ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறித்தபகுதிக்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், அதனைத் தொடர்ந்தே குறித்த வாய்க்கால் சீரமைப்பிற்கு தனது இவ்வாண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிற்குட்பட்ட […]

புற்றுநோய் மருந்துகள் உலர் மீன்களுக்குள் மறைத்துக் கடத்தல்!

புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் சுமார் 08 இலட்சத்திற்கும் அதிகமான மருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நாத்தாண்டிய – கெட்டாரமுல்ல பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் இந்த மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. புற்றுநோய் மற்றும் நரம்பு நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட 863,680 மருந்துகள் 12 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சிறிய ரக லொறி ஒன்றின் மூலம் கடத்தப்பட்டுள்ளன. குறித்த லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, கெட்டாரமுல்ல பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போதே பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

பொலிஸாருக்கு அதிவிசேட உத்தரவு!

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நிபந்தனையின்றி முற்றுகையிடுமாறு பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார். ஜனாதிபதி முதல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் எனவும், […]

விரைவில் வடக்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்கான “சிசு செரிய” பேருந்துச் சேவை

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கு மாகாணத்தில் விரைவில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து கல்வி நடவடிக்கைக்காகச் செல்லும் மாணவர்களுக்கு இதன் நேரடி நன்மை கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிசு செரிய’ சேவையானது கல்வி அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இலங்கை […]

சட்ட விதிகளை மீறி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 38 செல்லப்பிராணிகள் மீட்பு!

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்ட விதிகளை மீறி, சுமார் 9 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 38 செல்லப்பிராணிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.01 மணியளவில் இவர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார். சுங்க அதிகாரிகள் மற்றும் […]

நீண்ட காலமாகத் தேங்கியிருந்த நீதிமன்ற வழக்கு பொருட்கள் மூலம் ரூ. 953 மில்லியன் வருமானம்!

நாட்டிலுள்ள நீதவான் மற்றும் மேல் நீதிமன்ற வளாகங்களில் நீண்டகாலமாகத் தேங்கிக் கிடந்த வாகனங்கள், மரக்குற்றிகள் உட்பட வழக்குப் பொருட்களை அப்புறப்படுத்தும் விசேட திட்டத்தின் மூலம் கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 952,896,911.74 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. வழக்குப் பொருட்கள் மூலமான வருமானத்துடன், ஏனைய நீதித்துறை சார் வருமானங்களையும் சேர்த்தால் மொத்தமாக 6,574,829,926.91 ரூபா (சுமார் 650 கோடி) வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. பிரதிகள் எடுப்பதற்கான கட்டணம், நோட்டரி கட்டணங்கள், அபராதங்கள், முத்திரை வரிகள் […]

‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ தேசிய நாமல் உயன!

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ், இந்நாட்டின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கும் நோக்கில், முதன்முறையாக தேசிய நாமல் உயனவை ‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ பிரகடனப்படுத்தும் நிகழ்வும், அதன் 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அநுராதபுர மாவட்டத்தின் பலாகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 602 ஹெக்டெயார் பரப்பளவைக் கொண்ட தேசிய நாமல் […]

தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – விஜேதாச ராஜபக்ஷ

நெருக்கடி நிலைமைகளின்போது தற்போதுள்ள ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட செயற்பட்டபோது, தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அவ்வாறு செயற்படாமல் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன. அது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய யுத்த நிலைமை காரணமாக நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. என்றாலும் இதனையும்விட எரிபொருள் […]

வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்; யாழ்.பண்ணையில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர், சிறையில் இருப்பவருக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். இதன்போது, முன் பகை காரணமாக அவர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயைக் கைது செய்தமை தேசத்துரோக செயல்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத்தை முறியடிக்க அயராது உழைத்த சுரேஷ் சாலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒரு பாசாங்குத்தனமான மற்றும் தேசத்துரோகச் செயல். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும், […]