இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தோட்டக் கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் கொட்டகலை சி.எல்.எப். (CLF) காரியாலயத்தில் சனிக்கிழமை (15) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
தோட்டவாரியாக இனங்காணப்பட்ட தொழிற்சங்கம் மற்றும் அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தோட்டக் கமிட்டி தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, எதிர்காலத்தில் குறித்த விடயங்களைக் கவனத்திற்கொண்டு காலத்திற்கேற்றவாறான தீர்வுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக்கலந்துரையாடலில் நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், போசகர் சிவராஜா, சிரேஷ்ட உறுப்பினர் லோகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.