வாட்டர்லூ பிராந்திய தொழிலாளர்களை வரிகட்டணங்களிலிருந்து (Tariffs) பாதுகாக்க $1.1 மில்லியனுக்கும் அதிக தொகையை முதலீடு செய்யும் ஒன்டாரியோ

மாகாண நிதியுதவியானது 1,230 நல்ல ஊதியம் பெறும் உள்ளூர் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதுடன், நிறுவனங்கள் புதிய சந்தைகளில் கால்பதிக்க உதவி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தகம் உள்ளடக்கம் வாட்டர்லூ (WATERLOO) — வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான திட்டத்தின் (Trade-Impacted Communities Program – TICP) கீழ் $1.1 மில்லியனுக்கும் அதிகமான முதலீட்டின் மூலம், வாட்டர்லூ பிராந்தியத்தில் சுங்கவரிகளால் (Tariffs) பாதிக்கப்பட்ட தொழிலாளர்களையும் தொழில்களையும் ஒன்டாரியோ அரசு பாதுகாத்து வருகிறது. ஏற்றுமதி சந்தைகளை […]

கிச்சனரில் மேலும் பல நோயாளிகளுக்கு முதன்மைச் சிகிச்சையை இணைக்கும் ஒன்டாரியோ

கிச்சனரில் மேலும் பல நோயாளிகளுக்கு முதன்மைச் சிகிச்சையை இணைக்கும் ஒன்டாரியோ 2029 ஆம் ஆண்டிற்குள் ஒன்டாரியோவிலுள்ள அனைவருக்கும் குடும்ப மருத்துவர் அல்லது முதன்மைச் பராமரிப்புப் பிரிவை உறுதிசெய்ய மாகாணம் $3.4 பில்லியன் முதலீடு செய்கிறது. கிச்சனர் (KITCHENER) — 2029 ஆம் ஆண்டிற்குள் மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு குடும்ப மருத்துவர் அல்லது முதன்மைப் பராமரிப்புக் குழுவின் சிகிச்சையை இணைக்கும் நோக்கில், ஒன்டாரியோவின் $3.4 பில்லியன் பெறுமதியான “முதன்மைச் பராமரிப்புச் செயல்பாட்டுத் திட்டத்தின்” (Primary Care Action […]

“எண்ணூரில் பேரதிர்ச்சி!” – ரசாயனக் கழிவுகளால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்; கொந்தளிக்கும் வடசென்னை மீனவர்கள்!

சென்னை சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததால் டன் கணக்கிலான மீன்கள் செத்து மிதக்கும் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்: வடசென்னையில் செயல்பட்டு வரும் 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் நச்சு ரசாயனக் கழிவுகள் ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படுவதே மீன்கள் உயிரிழக்கக் காரணம் எனக் குற்றம் சாட்டி, தாழங்குப்பம் பகுதி மீனவர்கள் நள்ளிரவு […]

“நயினார் மீது கை வைத்தால் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும்!” – முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த துரைமுருகன்!

வேலூர் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் தமது ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்ற அச்சம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். “100 நாட்களில் எதையும் சாதிக்கவில்லை”: வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தவெக அரசின் 100 நாள் செயல்பாடுகள் குறித்துக் கடுமையாகச் சாடினார். “தவெக ஆட்சியில் 100 நாட்களில் எதைச் சாதித்தோம் என்று அவர்களை எதையாவது ஒன்றைச் சொல்லச் […]

“மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா?” – கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொ*லை; மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் ஈவு இரக்கமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவத்திற்கு, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடும் தொடர் போராட்டமும்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஹனூர் வனப்பகுதியில், வேட்டையாட வந்தவர்கள் எனக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வேட்டையாடுபவர்கள் அல்ல, அப்பாவிகள் எனக் கூறி உறவினர்களும் கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் […]

“திமுகவை பழைய ஃபார்முக்கு கொண்டுவந்த தவெக அரசுக்கு நன்றி!” – உதயநிதி ஸ்டாலின்!

சென்னை சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சோர்ந்து போயிருந்த திமுகவை, தனது கைது நடவடிக்கைகளின் மூலம் மீண்டும் பழைய ஃபார்மிற்குக் கொண்டு வந்த தவெக அரசுக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கும் நன்றி தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். “ஆட்சிக்கு வந்துள்ள சர்க்கஸ் கூட்டம்”: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு […]

“10 நாட்கள் பொறுத்திருங்கள்; முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!” – உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

சென்னை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற ‘நல்வாழ்வு தூதர்கள்’ நியமன விழாவில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், இன்னும் 10 நாட்களில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் விடுதிகள்: நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், மாணவர்களின் நலனுக்காக அரசு திட்டமிட்டுள்ள பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். அப்போது, மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பிலான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் […]

“சுதந்திர தின விழாவில் த்ரிஷாவுக்கு முன்னுரிமை: இந்த நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது?” – திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கேள்வி!

தூத்துக்குடி சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முதல் வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “இந்த நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது?” எனத் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பியுள்ளார். காவல் நிலையத்தில் கையெழுத்து: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு […]

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ மீண்டும் மறு வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை!”

ன்னை பகுஜன் சமாஜ் கட்சித் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ (CBI) அதிகாரிகள் மீண்டும் மறு வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை வழகின் பின்னணி: கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வீட்டைப் பார்வையிடச் சென்ற பகுஜன் சமாஜ் கட்சித் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மக் கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். செம்பியம் போலீசாரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டரில் […]

“சுதந்திர தினமே சும்மா தினமாக மாறிவிட்டது!” – சீமான் வேதனை

சென்னை சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காவிரி நீர், மேகதாது, மாஞ்சோலை விவகாரங்கள் மற்றும் தொடர்ச்சியான தமிழர் உரித்துப் பிரச்சினைகள் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தனியரசு, திருமாறன் ஜி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். “வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது” – சீமான் ஆதங்கம்: கூட்டத்திற்குப் பின்னர் […]