வேலூர்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் தமது ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்ற அச்சம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“100 நாட்களில் எதையும் சாதிக்கவில்லை”:
வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தவெக அரசின் 100 நாள் செயல்பாடுகள் குறித்துக் கடுமையாகச் சாடினார். “தவெக ஆட்சியில் 100 நாட்களில் எதைச் சாதித்தோம் என்று அவர்களை எதையாவது ஒன்றைச் சொல்லச் சொல்லுங்கள். 100 நாளில் இமயமலை அளவுக்குச் சாதிக்க முடியாது என்றாலும், ஒரு குன்று அளவிற்காவது சாதித்திருக்கலாம். தேர்தலின் போது மகளிருக்கு ரூ.2,500, குடும்பத்திற்கு 6 சிலிண்டர் என அறிவித்த வாக்குறுதிகள் பக்கமே அவர்கள் இன்னும் செல்லவில்லை; ஆனால் காரியத்தில் இறங்காமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
“பாஜகவைக் கண்டு அஞ்சும் தவெக”:
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவிற்கு பாஜகவுடன் கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிட்டோம். ஆனால், தவெக அரசு தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு விழுந்து விழுந்து ஆதரவு கொடுத்து வருகிறது. இதன் மூலமே பாஜக யாருக்குப் பின்னால் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும். பாஜகவை நேரடியாக அட்டாக் செய்யத் தவெக அஞ்சுகிறது; ஏற்கனவே பல்லக்குத் தூக்க ரெடி என்று விஜய்யே சொல்லிவிட்டார்,” என்று விமர்சித்தார்.
“நயினார் மீது நடவடிக்கை எடுக்க பயமா?”:
முதல்வர் விஜய்யின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது தவெகவினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள போதிலும், இதுவரை அவர் மீது எவ்வித வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை. இது குறித்துப் பேசிய துரைமுருகன், “நயினார் நாகேந்திரன் அப்படிப் பேசக்கூடியவர் அல்ல; ஆனால், தற்போதைய அவரது சேர்க்கை அப்படி இருக்கிறது போல. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என்ற கேள்வியை முதல்வர் விஜய்க்கு அர்ப்பணித்துக் கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் போல் நயினார் நாகேந்திரனைக் கைது செய்யாததற்குக் காரணம், பாஜக நிர்வாகி மீது கை வைத்தால் மத்திய அரசு இந்த ஆட்சியை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்ற அச்சம்தான்,” என்று ஆவேசமாகக் கூறினார்.
#Duraimurugan #DMK #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #NainarNagendran #BJP #VelloreNews #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates