ன்னை
பகுஜன் சமாஜ் கட்சித் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ (CBI) அதிகாரிகள் மீண்டும் மறு வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொலை வழகின் பின்னணி:
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வீட்டைப் பார்வையிடச் சென்ற பகுஜன் சமாஜ் கட்சித் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மக் கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். செம்பியம் போலீசாரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டரில் சுடப்பட்டார்; தாதா நாகேந்திரன் உயிரிழந்தார். சம்போ செந்தில், மொட்ட கிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமறைவாகியுள்ள நிலையில், 7 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிபிஐ கையில் எடுத்த விசாரணை:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் செம்பியம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சிபிஐ தற்போது மீண்டும் தனியாக மறு வழக்குப்பதிவு செய்துள்ளது.
நேரில் களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்:
இந்த வழக்கில் இடம்பெற்றுள்ள 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணையைத் தொடங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், கொலை சம்பவம் அரங்கேறிய பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இக்கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள், உண்மையான காரணங்கள் மற்றும் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 26 பேரில் 12 பேர் ஜாமீனில் வெளியில் உள்ள நிலையில், சிபிஐ விசாரணையில் புதிய குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் எனவும், விரைவில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#ArmstrongMurderCase #CBIInvestigation #BahujanSamajParty #ChennaiPolice #Perambur #CBI #TamilNaduNews #ChennaiNews #CrimeNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates