இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வருகை தரும் தமிழக மீனவர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (03) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்கள் நடவடிக்கை கண்டிக்கத்தக்க விடயமாக உள்ளது.குறித்த விடயத்தை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் வருகையும், அடாவடித் தனமும், வட பகுதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயத்தில் மௌனமாக இருக்கின்றார். கடற்றொழில் அமைச்சரை நாங்கள் பல தடவை சந்தித்து, பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்துள்ளோம். குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாகவும், அவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும், இந்த அரசாங்கமும், குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

எதிர்வரும் மே மாதம் தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெற இருக்கின்றது. இந்த நிலையில் இவ்வாறான செயல்பாடுகளும் தூண்டி விடப்படுகிறது. முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

அண்மையிலே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு பயணம் செய்த நிலையில், இந்திய மீனவர்களின் வருகை அதனால் எமது மீனவர்களின் பிரச்சினை குறித்து தெளிவுபடுத்திய போதும், சாதகமான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது. அரசியலும், எமது வாழ்வாதாரமும் பின்னி பிணைந்த விடயத்தை பார்க்கின்றோம்.

குறிப்பாக வட பகுதி மீனவர்கள் தாக்கப்படுகின்ற அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகின்ற போது இங்குள்ள அரசியல் கட்சிகளாக இருக்கட்டும், குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து உள்ளார்கள். அதை வரவேற்கிறோம்.

இவ்வாறான எதிர்ப்புக்கள் ஊடாகவே அரசாங்கத்தின் சில கொள்கைகளையும்,திட்டங்களையும் மாற்ற முடியும். அதே போன்று ஏன் இந்த மீனவர்கள் விடயத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல் கட்சிகள் ஏன் ஒருமித்த குரலில் இதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் இல்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் இருக்கிறார்கள். அவர்கள் கூட இந்திய மீனவர்கள் விடையத்தில் மௌனம் காக்கிறார்கள். மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இரு தினங்களாகி விட்டது.

மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஏற்பட இழப்புகளுக்கு இது வரை எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை என அந்த மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். கடந்த வருடம் ஏற்கட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக தமக்கு ஏற்பட்ட பாதிப்பகளுக்கும் எவ்வித நிவாரணங்களும் உரிய முறையில் கிடைக்கவில்லை.

நாங்கள் உள்ளூரில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற தொழில் முறைமைகளையும் நிறுத்தி தருமாறு அரசிடம் கோரி இருக்கின்றோம்.

அதே சம காலத்தில் இந்திய மீனவர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நாங்கள் முன் வைத்தோம். ஆனால் உள்ளூரில் தடை செய்யப்பட்ட தொழில்களை நிறுத்தி எங்களை திருப்தி படுத்துகின்ற அரசாங்கம் ஏன் இந்திய மீனவர்களின் வருகையை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை தடுக்க வேண்டும் என்பதே எமது மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது என தெரிவித்தார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை