மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ் கடந்த முதலாம் திகதி முதல் ‘போதைப்பொருள் தடுப்பு வாரம்’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை (04) கொழும்பு – இராஜகிரியவில் இடம்பெற்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகம் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த விசேட நிகழ்ச்சி, இராஜகிரிய ஹேவாவிதாரண மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சரியான புரிதல் மற்றும் மனப்பாங்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர், கல்வி என்பது வெறும் பரீட்சைகளில் சித்தியடைவது மட்டுமல்ல எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“போதைப்பொருள் போன்ற அழிவுகரமான விடயங்கள் குறித்து மாணவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்களிடம் சிக்காமல் இருக்க, ‘ஆம்’ என்று சொல்வதைப் போலவே ‘இல்லை’ அல்லது ‘முடியாது’ என்று சொல்லத் தேவையான ஆத்ம பலத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.”

கல்விச் செயற்பாடுகளுடன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எவ்வாறு ஆளுமைத் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன், மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் கல்வி மற்றும் தகவல் அதிகாரி மஹேஷி மதுசங்கா மற்றும் உதவி ஆலோசனை அதிகாரி உதேஷிகா லக்மாலி ஆகியோர் பிரதான வளப்பங்களிப்பை வழங்கி விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இந்தநிகழ்வில் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலாளர் கசுன் ஏபா செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அரசாங்க ஊழியர்களுக்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சும், கோட்டே பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாமும் கோட்டே பிரதேச செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

arres

பல்கலைக்கழக மாணவனின் விபரீத ஆசை! பிரெஞ்சுப் பெண்ணுக்கு நேர்ந்த கதி – உனவடுனவில் பரபரப்பு!

May 1, 2026

​​இலங்கையின் சுற்றுலா சொர்க்கமான உனவடுனவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரெஞ்சு நாட்டுப் பெண் ஒருவர் வாடகை வாகனத்தில்

Screenshot_20260501_140015_Gallery

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சஜித் பிரேமதாச சவால்

May 1, 2026

மக்கள் தங்களது மக்கள் ஆணையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

Y5VYXVPWLJCSPJ4XUVXEZUUAZ4

மருத்துவமனையில் ‘போலித் துப்பாக்கி’ வைத்திருந்த நோயாளி: 76 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது காவல்துறை

May 1, 2026

நயாகரா பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், மருத்துவமனையில் நோயாளியாக இருந்தபோது அவரிடம் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர்

cANADA ROAD

முக்கிய போக்குவரத்து பாதிப்பு: மில்டன் அருகே 401 நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதல் – இரண்டு வழித்தடங்கள் மூடல்

May 1, 2026

மில்டன் (Milton) அருகே நெடுஞ்சாலை 401-ன் மேற்கு நோக்கிய (Westbound) பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த பல வாகன விபத்துகள் காரணமாக,

canada security

பீபா (FIFA) மாநாடு: உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக வான்கூவரில் பலத்த பாதுகாப்பு

May 1, 2026

வியாழக்கிழமையன்று வான்கூவரில் நடைபெற்ற 76-வது பீபா (FIFA) மாநாடு, உலகம் முழுவதிலுமிருந்து கால்பந்து அதிகாரிகளை ஈர்த்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு

Sanak

அரசாங்கம் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது – சாணக்கியன்

May 1, 2026

அரசாங்கம் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட, பெரும்பான்மை சமூகத்தைப் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காக

sin

சின்மயா மிஷனின் அமிர்த யாத்திரை; யாழ்ப்பாணத்தில் 10 இலட்சம் இளைஞர்கள் இலக்கு

May 1, 2026

சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் “சின்மயா அமிர்த யாத்திரை” யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. சின்மயா மிஷனின் இளைஞர்

Chemma

பதின்ம வயதுடையவரின் எலும்புக்கூடு செம்மணியில் மீட்பு!

May 1, 2026

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நேற்று இடம்பெற்ற 4ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது, பதின்ம வயதுடைய ஒருவருடையது

sea

2010 தொடக்கம் 2026 ஏப்ரல் வரை 2,629 பேர் உயிரிழப்பிலிருந்து மீட்கப்பட்டனர்!

May 1, 2026

இலங்கையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் (2026) மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் போது, நீரில் மூழ்கவிருந்த 19

fsfs

உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கு மக்கள் போராட்டம்!

May 1, 2026

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ”

Chand

தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல முயற்சிகளைச் செய்கின்றது!

May 1, 2026

பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே

tho

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் பணிப்பு

May 1, 2026

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக் குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் கமக்கார