வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம்(4.3.2026) கொழும்பின் மையப்பகுதியில் வளித் தரச் சுட்டெண் 144 ஆகப் பதிவாகியுள்ளது. எனினும் பாதுகாப்பான அளவு 50 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.100 க்கும் அதிகமான பதிவுகள் ஆரோக்கியமற்ற சூழலைக் குறிக்கின்றன. இது தொடர்பாக சிறுவர் நல மருத்துவ நிபுணர் மஹேஷாக விஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “மாசுபட்ட […]

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சாலே பெப்ரவரி 25, 2026 அன்று கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு வழங்கப்பட்ட அனுமதியின் பேரில் அவர் தற்போது 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். இந்நிலையில், […]

இருளில் மூழ்கியது கியூபா

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினை காரணமாக கியூபாவில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் ஏற்பட்ட “எதிர்பாராத” செயலிழப்பு நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் மின் தடைக்கு வழிவகுத்ததாக அறிக்கை கூறுகின்றது. தலைநகர் ஹவானாவில் இருந்து மேற்கு பினார் டெல் ரியோ மாகாணமான காமகுவே […]

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐஆர்ஐஎஸ் புஷேர் (IRINS Bushehr ) என்று அழைக்கப்படும் இந்த கப்பல், டேங்கர் வகை இராணுவ விநியோக கப்பலாக கருதப்படுகின்றது. இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் கடலில் நங்கூரமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மூழ்கியதாகக் கூறப்படும் ஐஆர்ஐஎஸ் தேனா கப்பலுக்கு பொருட்களை வழங்குவதற்காக இந்த ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பல் வந்துள்ளதாகவும் […]

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தருமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தியும் மாவட்ட அரசாங்கதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர். குறித்த மனுவில் தெரிவிக்கப்படுவதாவது, கடந்த 25. 2. 2026 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் […]

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார். பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரம் தயாரித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தப் பிரதிவாதியான சட்டத்தரணிக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு […]

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச் செயலணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல இன்று (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் தற்போது வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையுடன் இணைக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகவும் செயற்படுவார். முக்கிய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் […]

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஈரானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்தத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது. “இந்தத் தாக்குதல்கள்… எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு […]

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப் பதியச் செய்யும் முயற்சியின் தொடர்ச்சியாக சில பதவிகள் உருவாக்கப்பட்டும், சில பதவிகள் விரிவுபடுத்தப்பட்டும் உள்ளன. கடந்த டிசம்பரில் கார்னி தனது துணை அமைச்சர்களை மாற்றியமைத்தபோது, இந்த மாற்றங்கள் கனடாவாசிகளுக்கு தெளிவான விடயங்களை வழங்கும் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். 2025 ஜனவரியில் பொது துறையை விட்டு வெளியேறி பிளாக்ரொக் முதலீட்டு (BlackRock Investment Institute) நிறுவனத்தில் […]

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச கடற்பரப்பில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கத் தாக்குதல்களால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பல் மற்றும் தற்போது இலங்கை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மற்றைய ஈரானிய கப்பல் ஆகியவை தொடர்பாக பாராளுமன்றில் இன்று (5) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நேற்று இலங்கை […]