தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கட்டைப்பிராய் பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டுமானம் ஒன்றினை இடித்து அகற்றுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது. இதற்கமைவாக, குறித்த கட்டடத்தை இடித்து அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது. இப்பணிகளை பிரதேச சபை தவிசாளர், செயலாளர், பொலிஸார் மற்றும் நீதிமன்ற […]
திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது
புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வியாழக்கிழமை (05) அன்று குறித்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர் வெல்லவாய, மஹா ஆரகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விசாரா பணியாளராக (Office Assistant) கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் கஞ்சா தொகையுடன் பயணித்துக்கொண்டிருந்த போதே […]
ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது. குறித்த பிரேரணைக்கு எதிராக 52 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் கிடைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல், தப்பிச் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் செல்லும் முயற்சியில், பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வைத்து, வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் என இருவர் புதன்கிழமை (4) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் கரடியனாறு […]
உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய கொள்கை சமிக்ஞைகளை வெளியிடத் தயாராக உள்ளது. குறிப்பாக 2026 முதல் 2030 வரையிலான புதிய ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்துக்கான வழிகாட்டி வரைபடம் இந்த அமர்வுகளில் பரிசீலிக்கப்பட உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா, வளர்ச்சியின் வேகத்தை மட்டும் அல்லாது அதன் தரத்தையும் முக்கியமாகக் கவனத்தில் கொண்டு முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2035ஆம் […]
மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ் கடந்த முதலாம் திகதி முதல் ‘போதைப்பொருள் தடுப்பு வாரம்’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை (04) கொழும்பு – இராஜகிரியவில் இடம்பெற்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகம் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியன இணைந்து ஏற்பாடு […]
2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆளணியின் ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான செயற்றிட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் நேற்று(04.03.2026) காலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்குரிய முதலாவது அமைச்சுசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமாக […]
அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விசேட சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(03) நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எஸ். சந்துரு பெர்னாண்டோ, மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து, ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, நல்லெண்ண விஜயத்தின் ஒரு பகுதியாக, மன்னார் மாவட்டத்தின் பல்வேறு விடயங்கள் […]
மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பக் கோளாறினால் தேசிய மின்சாரக் கட்டத்தின் அதிர்வெண்ணில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தில் உள்ள நீராவி விசையாழி தானாக மூடப்பட்டு மின்சார அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக தேசிய மின்சாரக் கட்டம் சுமார் 55 மெகாவாட் மின் உற்பத்தித் […]
யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று(05.03.2026) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 36 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோலும், 19 நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதன்படி, எம்.குணரத்தினம் பரமேஸ்வரா சந்தி, எஸ்.தர்மவரதன் மருதனார்மடம், பல நோக்கு கூட்டுறவு சங்கம் பண்டத்தரிப்பு, கே.தேவகுருநாதன் கலிவியங்காடு, சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், மல்லாகம் பலநோக்கு […]