தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளின் போதே பொலிஸார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தையிட்டி விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் , வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் […]

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான போர்க்குற்றம்” என்று ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baqaei) குற்றம் சாட்டியுள்ளார். இது ஈரானின் கலாச்சார பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒரு “கொடிய குற்றம்” என்று தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஐக்கிய […]

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சலே தொடர்பில் நீதிமன்றிற்கு இன்னமும் தகவல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே இந்த விடயத்தை நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். சுரேஷ் சலேவின் சட்டதரணிகளிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் […]

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3ஆம் திகதி பிற்பகல் 2:00 மணியளவில், நுவரெலியா இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நுவரெலியா மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் காய்கறி கடை உரிமையாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்திய நாட்டவர் ஆவார். மற்றையவர் நுவரெலியா, பியதிஸ்ஸபுரத்தை […]

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாதுவ, பாலிகாவ வீதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய கோதுவகெ தொன் அனுராத இந்திக பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார். வியாழக்கிழமை (05) காலை அளுத்கமையிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற இலக்கம் 317 ரயிலில் […]

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நரம்பியல் பேராசிரியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர். பிரதம விருந்தினராக பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வைத்திய நரம்பியல் […]

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, வியாழக்கிழமை (05) அன்று நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் யுவதிகளால் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த மாதம் 23ஆம் திகதி ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் […]

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து அந்நாட்டுக் கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (27) மீன்பிடிக்கச் சென்ற இந்த இரு மீனவர்களது படகும் இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்துள்ளது. இதனால் கடலில் திசைமாறிய படகு, இந்திய கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டது. இதனை அவதானித்த இந்திய மீனவர்கள், தமது விசைப்படகு மூலம் குறித்த படகினை இழுத்துச் சென்று, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு […]

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவின் அல்-நசார் அணியில் விளையாடி வரும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,தனது குடும்பத்தினருடன் சொந்த விமானத்தில் சவுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒன்பது கப்பல்களிலும் கொண்டுவரப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். இந்த நிலக்கரியில் சாம்பலின் அளவு 102 சதவீதத்தினால் […]