கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசின் புதிய திட்டங்களின்படியே குறித்த கட்டணங்கள் உயர்வடைய உள்ளது. ஜனவரி மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இனிமேல் கடவுச்சீட்டு கட்டணங்கள் நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (Consumer Price Index – CPI) இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, மார்ச் 31 முதல் கனடிய கடவுச்சீட்டு கட்டணம் 2.7% அதிகரிக்கிறது. இது […]

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள், காலைக் கூட்டத்தை முடித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பியுள்ளனர். இதன்போது ஒரு மாணவியின் தண்ணீர் போத்தலை அவதானித்தபோது, அதற்குள் ஏதோ ஒரு மாத்திரை கரைந்து நுரை பொங்கிய நிலையில் இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த மாணவிகள், அந்தப் […]

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். முன்னதாக ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்துகின்ற நிலையில், அவ்வாறொன்று இடம்பெறவில்லை என எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கின்றது. ஆகையினால் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். இதேவேளை மற்றுமொரு ஈரானிய கப்பல் […]

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 45,000 வேலைகளை வழங்கிக் கொண்டிருக்கும் மாகாணம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு உணவளிக்க உதவும் எங்கள் கோழிப் பண்ணையாளர்களுடன் ஒன்ராறியோ அரசாங்கம் இணைந்து நிற்பதில் பெருமை கொள்கிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறது. இது சமூகத்திற்கு ஆதரவாக ஒன்றிணையும் GTA முழுவதிலுமுள்ள அமைப்புகளின் தாராளத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி அங்கீகரிக்கும் பட்டியலாகும் என பிராம்டன் நகர சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான யுனைடெட் வே ஊழியர் பிரச்சாரத்திற்கு (United Way Employee Campaign)பல்வேறு நிதிசேகரிப்பு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் தன்னார்வமாகச் சேவையாற்றிய அல்லது […]

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (04) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 250 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என அடையாளம் […]

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (04) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காணாமல் போனவர் வத்தளை – மாபோல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தடயவியல் விஞ்ஞான பீடத்தில் பயின்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கல்விச் சார் […]

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,175 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 84.96 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று […]

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார். இதேவேளை 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று, எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா […]

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகியுள்ளது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக கடந்த 2025 செப்டம்பரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தினால் அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் சுமார் 1.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 10 லட்சம் […]