சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. புல்மோட்டை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 300 லீற்றருக்கும் அதிகமான டீசலைச் சேகரித்து விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோமரங்கடவல பகுதியில் உள்ள கால்நடை பண்ணை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 டீசல் கொள்கலன்கள் மற்றும் சந்தேக […]
ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். ஈரானின் கப்பல்களைத் தாக்கும் அச்சுறுத்தல்கள் காரணமாக, அந்தப் பகுதியில் கடல்சார் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 15,000 பயணக் கப்பல் பயணிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்த ஹார்முஸ் நீரிணையில் ஒரு முக்கியமான பாதையாகும், சாதாரண சூழ்நிலைகளில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இதன் வழியாகவே செல்கின்றது. […]
புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவுமான பாராளுமன்ற விசேட குழுவில் சேவையாற்றுவதற்காக மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பிரசன்ன குணசேன, என்டன் ஜயகொடி, அருண ஜயசேகர, அனுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோஹிணி குமாரி விஜேரத்ன, எம்.கே.எம். அஸ்லம், அனுஷ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபலகம மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் இன்று […]
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. சுகாதார அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து சுகாதார அமைச்சுக்குக் கட்டடமொன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதன் பின்னர், அதற்கான வாடகைப் பணத்தைக் காசோலைகள் மூலம் செலுத்துவதில் எவ்வித தாமதமும் இன்றிச் செயற்படுவதற்காகவே சந்தேகநபர் […]
சில பகுதிகளில் பிற்பகல் மழை
ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான […]
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. “அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது, இதன் விளைவாக இலங்கை கடற்படை டஜன் கணக்கான ஈரானிய மாலுமிகளை […]
தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில், பணிபுரிந்த மேற்பார்வையாளரான பெண்ணை சக ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிம்ஹானி பெரேரா என்ற இளம் பெண்ணே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். தாக்குதலை நடத்தியவர் அதே […]
ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தெஹ்ரானில் நடைபெறவிருந்த கமேனியின் இறுதிச் சடங்குகள் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன என தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதிச் சடங்கில் பல கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த இடத்தில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. 1989 இல் கொமெய்னியின் இறுதிச் சடங்கில் சுமார் […]
மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மூத்த உதவியாளர் முகமது மொக்பர், ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. தேவைப்படும் வரை மத்திய கிழக்கில் போரைத் தொடருவோம் என்று அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவம் அமெரிக்காவுக்கு எதிராக 17 ஆவது அலை தாக்குதல்களைத் தொடங்கியதாக அந்நாட்டின் […]