பதுளை நகரில் தீ

பதுளை நகரில் உள்ள பிரபல உணவக கட்டடமொன்றில் புதன்கிழமை (04) காலை திடீரென ஏற்பட்ட தீ பரவலில் குறித்த கட்டடம் தீக்கிரையாகியுள்ளது. பதுளை மாநகர தீயணைப்பு படையினரின் கடும் முயற்சியால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் உணவகத்திலிருந்த உணவு பண்டங்கள், ஏனைய உணவக அத்தியாவசிய பொருட்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன. இதன்போது உணவகத்தில் இருந்து வெளியேற முடியாமல் புகை மண்டலத்தால் மூச்சு திணறலுக்கு மற்றும் காயங்களுக்குள்ளாகிய இரண்டு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். […]
பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு நாள் போராட்டம்

பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04.02.2026) கறுப்பு நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த பல்வேறுபட்ட ஈழத்தமிழ் அமைப்புகளும் இணைந்த் இந்த போராட்டத்தை ஒருங்கிணைந்திருந்துள்ளனர். இதில் பல நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு நாள் போராட்டம் | Black Day Protests In Britain போராட்டத்தின் போது பேரணியும் […]
முச்சக்கர வண்டியிலிருந்து வீசப்பட்ட யுவதி பலி

ஹொரணை – ரத்னபுர பிரதான வீதியில் சம்பவித்த விபத்தில் 20 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக குறித்த யுவதி முச்சக்கர வண்டியில் இங்கிரிய நோக்கி பயணித்துள்ளார். வளைவில் எண்ணெய் தாங்கி லொறியுடன் முச்சக்கர வண்டி மோதியதில், பின் இருக்கையில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டு, லொறியின் பின் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் […]
நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(4.2.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக இளம் யுவதிகள், இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வது காணக்கூடியவாறு உள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக யாழ் மாவட்டம் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. இது அபாய அறிகுறியாகும்.இத்தருணத்தில் இளைய தலைமுறையை […]
ஹட்டனில் மக்கள் மாநாடு “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்”

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. […]
எந்தவொரு அரசாங்கமும் அடக்குமுறையை கையில் எடுப்பதென்பது அந்த அரசின் பலவீனமாகும் – ராஜித சேனாரத்ன

எந்தவொரு அரசாங்கமும் அடக்குமுறையை கையில் எடுப்பதென்பது அது அந்த அரசாங்கத்தின் பலவீனமாகும். தற்போதைய அரசாங்கமும் தங்களது இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே ஆட்சியாளர்களை குற்றப்புலனாய்வுக்கு அழைக்கிறது. மக்கள் இதற்கு மாத்திரம் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறையில் புதன்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே மக்களின் ஆணையை கோரி இருந்தது. அதன் பிரகாரம் […]
உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பு 2050 ஆம் ஆண்டுக்குள் 50வீதம் வரை உயரக்கூடும்?

உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பு 2050ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் வரை உயரக்கூடும் என தமஜழக்கத்தின் அடையாறு பகுதியிலுள்ள புற்றுநோய் மைய இயக்குநர் கல்பனா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பு அதிகரித்துவருகிறது. மாறிவரும் வாழ்வியல் முறைகளே இதற்கு முதன்மைக் காரணமாக சொல்லப்படுகிறது. இளைஞர்களிடையே பரவி வரும் ‘கூல் லிப்’ (Cool Lip) பயன்பாடு குறித்து அடையாறு புற்றுநோய் மைய இயக்குநர் கல்பனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் […]
அவுஸ்திரேலியாவில் கடலில் நீந்தி குடும்பத்தை காப்பாற்றிய சிறுவன்

அவுஸ்திரேலியாவில் தமது குடும்பத்தைக் காப்பாற்ற 4 மணி நேரம் இடைவிடாமல் கடலில் நீந்திய சிறுவனின் தைரியத்தைப் பார்த்துப் பலர் வியப்படைந்துள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரான குவிண்டலப்பில் நடந்தது அந்த அதிசயம். 13 வயதுச் சிறுவன், அவருடைய தாய், இரண்டு இளைய சகோதரர்கள் ஆகியோர் கடலில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதைப் பார்த்த சிறுவன் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டரை 4 மணி நேரத்தில் நீந்தி உதவி கேட்கச் சென்றார். அதில் முதல் […]
ஆனந்த் அம்பானியின் தங்க நிற கார்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திய நிலையில்இ தற்போது அனந்த் அம்பானி வாங்கியுள்ள புதிய சொகுசு கார் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அனந்த் அம்பானி தனது கார் சேகரிப்பில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்.கிளாஸ் ரக காரைச் சேர்த்துள்ளார். மேலும் சாதாரணமாகவே பல கோடி மதிப்புடைய இந்த காரைஇ அவர் முழுவதுமாக தங்க நிறத்தில் மின்னும் வகையில் வடிவமைத்துள்ளார். பார்ப்பதற்கு தங்கம் போலவே ஜொலிக்கும் இந்த கார்இ சாலையில் செல்லும்போது அனைவரின் […]
சிறையில் 19 கைப்பேசிகள் மீட்பு

காலி சிறைச்சாலையின் A,B மற்றும் C,D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்களை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்போது 19 கையடக்கத் தொலைபேசிகளும், 11 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 4 கிராம் 384 மில்லிகிராம் நிறையுடைய 58 சிறிய பொதிகளில் பொதியிடப்பட்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேநேரம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பொதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறைச்சாலை தலைமையகத்தின் அறிவுறுத்தல்களுக்கு […]