சென்னை:
தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த அரசு வெளியிட்டுள்ள அறிக்கையை \”வெற்று அறிக்கை\” என்று வர்ணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் கடன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்ற அமைச்சர் மரிய வில்சனின் குற்றச்சாட்டைத் தங்கம் தென்னரசு முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் விரிவான விமர்சனத்தைப் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், \”வாணவேடிக்கை வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தெரியாமல் திணறி வருகிறது. அந்த இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்\” என்று கூறியுள்ளார். பொதுமக்களின் கோபக் கனலில் இருந்து தப்பிக்கவும், போராட்டங்களைத் தவிர்க்கவும் கையாளப்படும் ஒரு தப்பிக்கும் உத்தியே (Escapism) இந்த வெள்ளை அறிக்கை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்ட நிலையில், தற்போது ஹைப் ஏற்றிய அறிக்கை என்ற பெயரில் இது ஒரு ‘ஃப்ளாப்’ ஆகியுள்ளது என்று விமர்சித்துள்ளார். தவெக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதி நிர்வாகம் குறித்துத் தங்கம் தென்னரசு விரைவில் விரிவான விளக்கம் அளிப்பேன் எனக் கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் நிதி குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
#ThangamThennarasu #DMK #WhitePaper #TvkGovernment #Vijay #ThalapathyVijay #TNFinance #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #EconomicCrisis #TamilNaduPolitics #OppositionParty #FinancialAdmin #PublicDebt #TamilNaduNews #PoliticalAttack #Governance #Economy2026 #VijayGovernment #Transparency #TamilPolitics #DebtBurden #EconomyNews