அமெரிக்காவின் உதவியுடன் பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான கண்காட்சி!

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிக் கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில், பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான புவியியல் அமைவிடம்சார் செயற்கை நுண்ணறிவு (GeoAI) தொடர்பான கண்காட்சி மற்றும் கலந்தாய்வரங்கினை, பேரனர்த்த அபாய முகாமைத்துவ நிபுணர்களுக்கான சங்கத்துடன் (ADRiMP) இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நடத்தவிருக்கிறது.

மே மாதம் 14 ஆம் திகதி இக்கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும். மேம்பட்ட வரைபடக் கருவிகளும், அமெரிக்கா தலைமையிலான செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கங்களும் பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையையும், அவற்றிற்கான பதிலளிப்பையும் ​எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதை இந்நிகழ்வு காட்சிப்படுத்தும்.

வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலைக் கோலங்கள் போன்ற புவியியல் தரவுகளை, செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து, இயற்கைப் பேரனர்த்தங்களை அதிகாரிகள் சிறப்பாக எதிர்வு கூறுவதற்கும், கண்காணிப்பதற்கும் மற்றும் அவற்றிற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் GeoAI உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் அமைவிடம்சார் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தைப் பின்பற்றி, வெள்ளப்பெருக்கு, புயல் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அவசரகால நிலைமைகளில் விரைவான, மிகவும் துல்லியமான மற்றும் தரவுகள் மீதமைந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு இக்கருவிகள் உதவிசெய்கின்றன.

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவினைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான GeoAI முன்முயற்சியினை ஆரம்பிப்பதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உதவி செய்தது. ADRiMP உடன் இணைந்து, பேரனர்த்த முகாமைத்துவ நிபுணர்களான கலாநிதி நொவில் விஜேசேகர மற்றும் கலாநிதி அஸ்லம் சஜா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இச்செயற் திட்டமானது, தீவிர வானிலை நிகழ்வுகளின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை பலப்படுத்துவதையும், நீண்டகால மீண்டெழும் திறனைக் கட்டியெழுப்புவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

இச்செயற்திட்டமானது, 150 புவியியல் தகவல் அமைப்பு (GIS) தொழில் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ளதுடன், பேரனர்த்த அபாய முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான, செயற்கை நுண்ணறிவினால் மேம்படுத்தப்பட்ட கருவிகளையும் வழங்கியுள்ளது. உதாரணமாக, வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளை நிகழ் நேரத்தில் வரைபடமாக்குவதற்கும், குறிப்பிட்ட சமூகங்களை ஒரு புயல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைக் கணிப்பதற்கும், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மிகவும் செயற்திறனுடைய வகையில் மக்களை வெளியேற்றுவதை திட்டமிடுவதற்கும் இக்கருவிகள் உதவியாக அமையும்.

இக்கண்காட்சியில் இவ்வாறான திறன்கள் விளக்கிக்காட்டப்படும். இலங்கை முழுவதும் ஏற்படக்கூடிய மெய்யான பேரனர்த்த சவால்களுக்கு இத்தொழிநுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வகையில், புத்தாக்க, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட GeoAI தீர்வுகள் இக்கண்காட்சி மற்றும் கலந்தாய்வரங்கில் காட்சிப்படுத்தப்படும்.

மே மாதம் 14 ஆம் திகதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சி பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். இதைப் பார்வையிடுவதற்காக பதிவு செய்தல் அவசியமாகும். பதிவு செய்வதற்கு https://arcg.is/0b9bbL2 எனும் இணைப்பினை சொடுக்கவும்.

இலங்கையில் அமெரிக்கத் தூதரகத்தின் முன்முயற்சிகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://lk.usembassy.gov/ எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன் சமூக ஊடகங்களில் @USEmbSL இனைப் பின்தொடரவும்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது