ஈரோடு:
அதிமுகவில் இருந்து 15 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து இணையவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலத்திட்டங்கள்:
செம்மாண்டம்பாளையத்தில் நியாய விலைக் கடையைத் திறந்து வைத்துப் பேசிய அவர், “தவெக ஆட்சியில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், மேலும் பெண் குழந்தை திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம் விரைவில் வரவுள்ளது,” என்றார்.
அதிமுக மீது விமர்சனம்:
மேலும் அவர், “எடப்பாடி பழனிசாமி என்னை நீக்கியதால்தான் இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிமுக தற்போது யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிவிட்டது. மிக விரைவில் அதிமுகவில் உள்ள 15 பேர் தவெகவில் இணைய இருக்கிறார்கள்,” எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
#Sengottaiyan #AIADMK #TVK #CMVijay #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive