அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo) குறுங்காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டொராண்டோ பேராயத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் வேட்பாளர்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளவும், பிரார்த்தனையுடன் சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களிக்கவும் அவர் ஊக்கமளித்துள்ளார். அக்காணொளியில் கர்தினால் லியோ, பொது நன்மைகளுக்காகப் பங்களிப்பது நமது கடமை என்பதை வலியுறுத்தியுள்ளார். மேலும், நமது கத்தோலிக்கப் பள்ளிகளின் விசுவாசத்தையும் தனித்துவத்தையும் பாதுகாப்பதில் கத்தோலிக்கப் பள்ளி வாரிய அறங்காவலர்களின் (Catholic […]
டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நகரின் வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையாகும். அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை முதல் அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை வரை, மேயர், நகர சபை உறுப்பினர் (சிட்டி கவுன்சிலர்) மற்றும் பள்ளி அறங்காவலர் (ஸ்கூல் டிரஸ்டி) ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்காக மொத்தம் 2,22,550 வாக்காளர்கள் முன்கூட்டிய வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு விவரங்கள் அக்டோபர் […]
மோசமான நிலையில் மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை! அனைவரையும் பிரார்த்திக்குமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை முன்னரை விட மோசமான நிலையில் இருப்பதாக சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் சீலரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்
சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமாரின் காவியுடை விவகாரம் – சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்கின்றார் நளிந்த

குற்றச்செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமார் தொடர்ந்தும் காவியுடையை அணிந்திருக்கவேண்டுமா என்ற தீர்மானத்தை அவர்களின் பௌத்தமத பீடங்களே தீர்மானிக்கவேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகள் அல்ல என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- இது குறித்த தீர்மானத்தை எடுக்கும்போது குறிப்பிட்ட பௌத்தபீடங்களின் மகாநாயக்கர்களுடன் கலந்துரையாடும் நடைமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலை காணப்பட்டால்,குறிப்பிட்ட பௌத்தமதபீடத்திற்கு இது குறித்து அறிவிப்போம்,பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் மூலம் பௌத்தபீடாதிபதிகளிடம் இதுகுறித்த ஆலோசனைகளை பெறுவோம். இதேவேளை ஞானசாரதேரரின் காவியுடை […]
சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு ஆஞ்சியோகிராம்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது மருத்துவர்கள் குழுவொன்று இந்த பரிசோதனை அறிக்கையை ஆராய்ந்து சிராந்தி ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை அவசியமா அல்லது வேறு விதமான சிகிச்சை அவசியமா என்பதை தீர்மானிக்கும். சத்திரசிகிச்சை எதுவும் இடம்பெறவில்லைஇஅஞ்சியோகிராம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டது.அவருக்கு பொருத்தமான சிகிச்சை தேவைப்படுமா என்பதை நிபுணர்கள் குழு தீர்மானிக்கும் பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இந்த சிகிச்சைகளுக்காக காத்திருக்கின்ற போதிலும் மருத்துவர்களின் […]
சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதல்பெண்மணி சிராந்திராஜபக்சவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை இடம்பெறுவதாகஅவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளதை உடனடியாக ஆராய்ந்து உறுதிப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிராந்தி ராஜபக்ச சிறைச்சாலையில் இருந்தவேளை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை இதய சத்திரசிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். நீதிமன்ற அமர்வின் போது அவர் இதனை தெரிவித்தார். எனினும் அரசதரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சிராந்தி கொழும்பு […]
“ஆந்திரா: கனகதுர்கை அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம்!” – விஜயவாடாவில் சிறப்பான வரவேற்பு!

விஜயவாடா: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். சிறப்பான வரவேற்பு: தனி விமானம் மூலம் பிற்பகல் 3.45 மணிக்கு விஜயவாடா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, ஆந்திர அரசு சார்பில் அம்மாநில அமைச்சர்கள் நேரில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கனகதுர்கை அம்மன் கோவிலில் வழிபாடு: விஜயவாடா விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கனகதுர்கை அம்மன் கோவிலுக்கு சென்ற அவருக்குச் செண்டை மேளம் முழங்கப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. […]
“தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

சென்னை: தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மின் கொள்முதல் ஊழல்: இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், “அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தெரியாத அரசு, விலைவாசி உயரவே இல்லை எனப் பொய் சொல்கிறது. வெளிச்சந்தையில் ரூ.35-க்கு மின்சாரம் வாங்குவதில் நடைபெறும் ஊழல் பணத்தில்தான் அதிமுகவிலிருந்து 15 பேரை விலைக்கு வாங்கப் போகிறீர்களா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். குரங்குக் கூட்டம்: […]
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய வழக்க விசாரணையின் போது பிள்ளையான் காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு நிதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 2008ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தமை, காத்தான்குடியில் தமிழ் […]
பெற்றோலிய எரிவாயுவை வழங்க அமைச்சரவை அனுமதி !

2027ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய எரிவாயுவை (LPG) லிட்ரோ நிறுவனத்துக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை OQ Trading Limited நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் தேவைக்காக 420,000 மெட்ரிக் டொன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு சர்வதேச போட்டி அடிப்படையில் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, நான்கு நிறுவனங்கள் தமது கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ததன் பின்னர், கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய, குறைந்த விலையை முன்வைத்த நிறுவனமாக OQ Trading Limited தெரிவு […]