குறிவைக்கப்படும் பெண்கள்; பொலிஸ் விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை (12) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறை கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகில் பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, […]

மகிழ்ச்சிச் செய்தி – நாளை வங்கிக் கணக்குகளில் பணம்!

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கான நிதியுதவிகளை நாளை (14) முதல் வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலத்திட்ட உதவிகளுக்காக மொத்தம் 2 பில்லியன் 41 மில்லியன் 711 ஆயிரத்து 250 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ளது. குறித்த நிதியுதவியைப் பயனாளிகள் நாளை முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை, அஸ்வெசும நலத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 2026 ஒக்டோபர் மாதத்திற்கான […]

யாழில் நடந்த கோரம்; சம்பவ இடத்திலேயே பறிபோன இரு இளைஞர்களின் உயிர்கள்!

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இன்று (13) நண்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கைதடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் வீதிக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இளைஞர்களின் அடையாளங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை […]

ஆடம்பர சொகுசு காருக்குள் சிக்கிய மர்மம்

நீர்கொழும்பில் 22 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர BMW ரக சொகுசு காரை முடக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய பணத்தை பயன்படுத்தி தனது மகனின் பெயரில் இந்த காரை கொள்வனவு செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் […]

BGIA – அமைப்பினால் Behind Me Media வுக்கு விருது!

Business Global International award அமைப்பு ‘Excellence Award’ என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் திவ்ய மஹால் மண்டபத்தில் கடந்தவாரம் நடாத்தியிருந்தது. BGIA என்பது தொழில், சமூக சேவை, தலைமைத்துவம், கலை, ஊடகம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் ஒரு விருது வழங்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்படி நிகழ்வில் Behind Me Media வுக்கு Best Media Personalty Award வழங்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது […]

“அ.தி.மு.க-வில் இருந்து த.வெ.க-விற்கு 15 பேர் வரவுள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட ரகசியம்!

ஈரோடு: அதிமுகவில் இருந்து 15 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து இணையவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்துள்ளார். மக்கள் நலத்திட்டங்கள்: செம்மாண்டம்பாளையத்தில் நியாய விலைக் கடையைத் திறந்து வைத்துப் பேசிய அவர், “தவெக ஆட்சியில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், மேலும் பெண் குழந்தை திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம் விரைவில் வரவுள்ளது,” என்றார். அதிமுக மீது விமர்சனம்: மேலும் அவர், […]

“தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது ஏன்?” – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டைத் தவிர்க்கவே தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். மின்பற்றாக்குறைக்கான காரணம்: தலைமைச் செயலகத்தில் பேசிய அவர், “மாநிலத்தின் மின்தேவை 21,700 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. என்எல்சி மூலம் 1,850 மெகாவாட்டும், காற்றாலை மூலம் கிடைக்க வேண்டியதில் 3,000 மெகாவாட்டும் கிடைக்காததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முந்தைய அரசு நீண்டகால ஒப்பந்தங்கள் செய்யாததே இந்த அவசர நிலைக்குக் முக்கியக் காரணம்,” என்றார். ரூ.35 கொள்முதல் விளக்கம்: மேலும், “எரிவாயுவில் இருந்து உருவாக்கப்படும் […]

“அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா வழக்கு” – பேரவைத் தலைவர் முடிவு சரிதான் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. வழக்கு பின்னணி: தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 6 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது அவர்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத் தீர்ப்பு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் […]

“தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்க நடவடிக்கை வேண்டும்” – சீமான்!

சென்னை: தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு அலகு மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்யத் தவெக அரசு முடிவெடுத்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கமிஷன் குற்றச்சாட்டு: கடந்த தேர்தல் பரப்புரையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை ஊழல் என விமர்சித்த முதலமைச்சர் விஜய், தற்போது அதைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது யாரிடம் கமிஷன் வாங்க எனச் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மாற்று நடவடிக்கைகள்: அரசின் சொந்த மின் நிலையங்களைச் சீரமைத்தல் மற்றும் […]

“பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்கள் உடற்கல்வி வகுப்பு” – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

சென்னை: பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்கள் உடற்கல்வி வகுப்பு நடைபெறும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். புதிய கால அட்டவணை: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், திருத்தியமைக்கப்பட்ட பள்ளி வேலைநேரக் கால அட்டவணையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “மாணவர்கள் தினந்தோறும் உடற்கல்வி வகுப்புகள் வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆணையின் மூலம் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் இருக்கும் புதிய கால அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளோம்,” என்றார். […]