சென்னை:
தமிழகத்தில் மின்வெட்டைத் தவிர்க்கவே தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மின்பற்றாக்குறைக்கான காரணம்:
தலைமைச் செயலகத்தில் பேசிய அவர், “மாநிலத்தின் மின்தேவை 21,700 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. என்எல்சி மூலம் 1,850 மெகாவாட்டும், காற்றாலை மூலம் கிடைக்க வேண்டியதில் 3,000 மெகாவாட்டும் கிடைக்காததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முந்தைய அரசு நீண்டகால ஒப்பந்தங்கள் செய்யாததே இந்த அவசர நிலைக்குக் முக்கியக் காரணம்,” என்றார்.
ரூ.35 கொள்முதல் விளக்கம்:
மேலும், “எரிவாயுவில் இருந்து உருவாக்கப்படும் மின்சாரத்திற்கு மட்டும்தான் யூனிட் 35 ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதைத் தவிர்த்து 1,500 மெகாவாட் வாங்கத் திட்டமிட்டுள்ளோம். மின்சாரக் கொள்முதல் டெண்டரில் முறைகேடுகள் நடைபெறாது, முற்றிலும் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படும்,” என அவர் உறுதியளித்துள்ளார்.
#CTRNirmalKumar #ElectricityPurchase #TVK #PowerCut #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive