“வெளிச்சந்தையில் ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல்!” – செந்தில் பாலாஜி பகிரங்கக் குற்றச்சாட்டு!

சென்னை: வெளிச்சந்தையில் ஒரு யூனிட் 35 ரூபாய் என்ற விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல், முறைகேடு நடப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். மின்சார தட்டுப்பாடு: அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தலைமைச் செயலகம் உட்பட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்காமல், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரத்தைத் தவெக அரசு வாங்குகிறது,” என்றார். அமைச்சர் நிர்மல்குமாருக்கு கேள்வி: மேலும், “ஒரு யூனிட் ரூ.20-க்கு வாங்கியதை விமர்சித்த […]
பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை – இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் – சஜித்

இலங்கையின் அரசமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் கவலையளிக்கின்றன என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் மேலும்; தெரிவித்துள்ளதாவது பௌத்தத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை வழங்கும் ஏற்பாடுகளை இன்னமும் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை,உரிய சட்டங்களை விதிமுறைகளை நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு திருத்தியமைக்கவேண்டும். பௌத்தத்திற்கும் நாட்டின் ஏனைய மதங்களுக்கும் சமூகங்களுக்கும் உரிய மதிப்பை வழங்கும் அதேவேளை பௌத்தமதகுருமாரின் காவியுடைக்கு உரிய மரியாதையை வழங்கவேண்டும். வாரத்திற்கு இரண்டு தடவைகள் குழுக்களை […]
செம்மணி பற்றி வினோத உடைப் போட்டி; சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை!

ம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர். யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நேற்று இடம்பெற்றது இதன்போது விநோத உடை போட்டியில் பங்குகொண்ட ஓர் சிறுவனே செம்மணியில் புதையுண்ட சிறுவர்களாக காட்சியளித்தான். இவ்வாறு வேடமணிந்த சிறுவனின் பெற்றோரே இன்றைய தினம் விசாரணைக்கு […]
நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மலிவு விலை வாழ்க்கை, வீடமைப்பு, பொதுப் பாதுகாப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவையே தங்களது முதன்மைப் பிரச்சினைகளாக இருக்கும் என வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கனடாவின் மிகப்பெரிய நகரத்தை வழிநடத்த 50 க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இருப்பினும், அக்டோபர் 26 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய […]
ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார் என தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார் ஞானசாரதேரருக்கான விடுதலை பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் தேரர்களில் ஒருவரான தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஞானசார தேரர் மனஉளைச்சலிற்கு ஆளாகியுள்ளார் அவர் விஷமருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்இ அவர் ஒரு நஞ்சுப்போத்தலொன்றை வைத்திருந்தார். நான் அவரை அந்த எண்ணத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டேன் பின்னர் அந்த நஞ்சுப்போத்தலை எறிந்துவிட்டோம். பொதுபல சேனா […]
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை திருத்திக் கொண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் செயற்படுகிறது. பொதுஜன […]
அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர் அபிவிருத்தி நிலையம் குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக சந்திப்பொன்றை வழங்குமாறு இலங்கை தமிழ் பெண்கள் சங்கத்தினர் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைக் கடிதத்தைக் அமைச்சரிடம் நேரடியாகக் கையளித்த சங்கத்தின் பிரதிநிதிகள், அக்கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்: 1909 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை தமிழ் பெண்கள் சங்கத்தினால் 1948 ஆம் […]
சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார். நாளை 14 ஆம் திகதி நடைபெறும் சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் வேகமாக அதிகரித்து வரும் மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக அனைத்து அரச, தனியார் […]
75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது. அவர்களுக்கு 30 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே நிலைப்பாடாக […]
அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!
டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு நேற்றைய தினம் (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அதனை மேலதிக விசாரணைக்காக டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.