அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
தம்பட்டை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் நேற்று மாலை திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் முன்னெடுத்து வருகின்றனர்.