வாழ்வில் ஏற்படும் விக்கினங்களை நீக்கி சௌபாக்கியங்களை அருளும் பிள்ளையார் பெருங்கதை விரதம்!

பிள்ளையார் பெருங்கதை 24-11-2026 ஆரம்பம். 14-12-2026 பூர்த்தி.

இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் முக்கியமான விரதமாகும். இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும்.

இவ்விரதமானது பிள்ளையார் பெருங்கதை விரதம், விநாயக சஷ்டி விரதம், பிள்ளையார் கதை விரதம், பிள்ளையார் நோன்பு எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

மனித வாழ்வில் ஏற்படும் விக்கினங்கள் (தடைகள்) நீங்கி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டி இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இது விநாயக விரதங்களில் மிகச் சிறப்பான விரதமாகும். இந்நாள் விநாயகப் பெருமான் கயமுகாசுரனைச் சம்சாரம் செய்த நாளுமாகும். அதனால்தான் விநாயகர் ஆலயங்களில் பிள்ளையார் கதை விரத முடிவில் அன்று கயமுகாசுர சம்சாரம் (சூரன் போர்) நடைபெறும்.

எந்த விரதமாக இருந்தாலும் விரத ஆரம்ப நாளில் விநாயகர் பிடித்து வைத்ததே விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். களிமண் அல்லது மாட்டுச் சாணம் அல்லது சந்தனம் அல்லது மஞ்சள் ஆகியவற்றில் ஒன்றினால் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் குற்றி பூசை அறையில் வைத்து விநாயகராக வழிபடல் வேண்டும். விநாயகருக்கு பூசை செய்யச் சிறந்தது அருகம்புல்லாகும்.

அருகம்புல்லின் மகிமை

யாஷினி தேவி என்ற தேவ மங்கை விநாயகரை திருமணம் செய்ய விரும்பித் தவம் இருந்தாள். ஆனால் அதற்கு சம்மதிக்காத விநாயகர் அருகம்புல்லாக மாறி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என்று வரமளித்தார் என்கிறது புராண கதை.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை நீர் பட்டவுடன் உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் சகிப்புத் தன்மையோடும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் விளக்கியிருக்கிறார்கள். நல்ல சக்தியை தேக்கிவைத்து தீய சக்தியை விலக்கி வைக்கும் தன்மை கொண்டது அருகம்புல் என்பதுவும் ஒரு கருத்து.

இந்த இருபத்தொரு நாட்களும் மாலையில் விநாயகருக்குப் பூசை செய்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்து வணங்கவேண்டும். முதல் இருபது நாட்களிலும் ஒருவேளை உண்டு, பிள்ளையார் கதை படித்து விரதம் இருத்தல் வேண்டும். இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாட் காலையில் உபவாசம் இருந்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரபு.

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இருபத்தோராவது திதியான இறுதி நாளன்று அந்நூலை கோயில்களில் குருக்களைக் கொண்டும் அல்லது வீடுகளில் தாமாகவேனும் ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.

பிள்ளையார் கதை வரலாறு

கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் சொக்கட்டான் (தாயம்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த மகாவிஷ்ணு, சிவபெருமானுக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்லும்நிலை ஏற்பட்டது. இதனால் பார்வதிதேவி கடும் கோபம் கொண்டாள். மகாவிஷ்ணுவை குருட்டு மலைப்பாம்பாக போகும்படி சாபம் இட்டார்.

விஷ்ணுவுக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான், சுயமுகாசுரனின் வதம் நடைபெறும் வரை பொறுமையாக காத்து இருக்கும்படி கூறினார். அதன்படி விஷ்ணுவும் மலைப்பாம்பாக மாறி ஆலமர பொந்தினுள் இருந்து விநாயகரை வேண்டி தவம் இருந்தார்.

சில நாட்களில் சுயமுகாகரனை வதம் செய்து விநாயகர் அவனுக்கு முக்தி அளித்தார். அதன் பின்னர் விநாயகர் தன் இருப்பிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆலமரப் பொந்தில் மலைப்பாம்பாக இருந்த மகாவிஷ்ணுவை கண்டார்.

விநாயகரின் பார்வை பட்டதுமே விஷ்ணு தன் சுய உருவைப் பெற்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு ‘விநாயகரே எனக்கு காட்சி அளித்து மகிழ்ச்சி கொடுத்த மார்கழி சஷ்டி தினத்தன்று உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் துன்பம் துயரங்களில் இருந்து விடுதலை பெற்று நினைத்ததை பெற அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி விநாயகரும் விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்று யார் யார் 21 நாட்கள் விரதமிருந்து தன்னை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பதாக அருள்புரிந்தார் என்பது புராணம்.

விநாயகர் சஷ்டி விரதம் இருப்பவர்கள் சாபம், தோஷங்கள் நீங்கப்பெற்று முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. வாழ்வில் சகல செளபாக்கியங்களும் கைவரப் பெற்று நலமோடு வாழ்வார்கள்.

இவ் விரத நாட்களில் வீடுகளில், விநாயகர் ஆலயங்களிலும், சைவ ஆலயங்களிலும் பிள்ளையார் கதை, விநாயக புராணம், விநாயக கவசம் என்பவற்றைப் பாராயணம் செய்து வழிபடல் வேண்டும்.

hu

Nvidia CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்?

November 23, 2026

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO), தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் ஜென்சன் ஹுவாங்கை (Jensen

image_cb09806546

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து மூவர் நீக்கம்

November 23, 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2026/27க்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலிலிருந்து மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட், சைம் அயூப், அப்துல்லா

ind

வெலிங்டன் டெஸ்ட் போட்டி; இந்திய அணி 720 ரன்கள் குவித்து சாதனை

November 23, 2026

நியூஸிலாந்து – இந்​தியா அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று

psls

நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

November 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச்

arrestt

தாயின் தாலிக்கொடியைத் திருடி காதலனுக்காக அடகு வைத்த யுவதி கைது!

November 23, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர்

fsdf

தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான காணி விடுவிப்பு

November 23, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான

IMG_2511

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

November 23, 2026

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு

IMG_2510

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!

November 23, 2026

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’

IMG_2509

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

November 23, 2026

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

IMG_2508

மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

November 23, 2026

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள்

8

“திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தமிழக அரசு தயார்!” – தொல்.திருமாவளவன் பேட்டி!

November 23, 2026

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

IMG_2507

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

November 23, 2026

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை