இந்த மாத இறுதிக்குள் முதன்மை பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும்

இந்த மாத இறுதிக்குள் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் ஏழாவது மீளாய்வின் கீழ் சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான கடன் தவணையும் இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்து 9 சதவீதமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் மாறிவரும் நிலைமைகள் மற்றும் எதிர்காலப் போக்குகளைக் கவனமாகப் பரிசீலித்த பின்னரே நாணயச் சபை இத்தீர்மானத்திற்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்துள்ளன.

உயர்வடைந்த உலகளாவிய எரிசக்தி விலைகள் மற்றும் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள் என்பன உள்நாட்டில் பணவீக்க அழுத்தங்களைத் தொடர்ந்து தூண்டி வருவதால், 2026 ஒக்டோபர் மாதத்தில் ஆண்டிற்கு ஆண்டு ஒப்பீட்டளவில் பணவீக்கம் 8.3% ஆக அதிகரித்துள்ளது.

குறுகிய காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருக்கும் என்ற எதிர்வுகூறலைக் கருத்திற்கொண்டு, பணவீக்க எதிர்பார்ப்புகள் இலக்கிலிருந்து விலகிச் செல்லும் அபாயத்தைக் குறைப்பதற்கு நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்குவது அவசியம் என சபை கருதியது.

இவ்வாறான கொள்கை இறுக்கமானது, உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் சபை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

nan

இந்த மாத இறுதிக்குள் முதன்மை பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும்

November 20, 2026

இந்த மாத இறுதிக்குள் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்

photo-collage.png (4)

செம்மணி மனிதப் புதைகுழி; தொல்லியல் நிபுணரின் அறிக்கையை நீதிமன்றம் நம்பியிருக்கத்தேவையில்லை

November 20, 2026

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கை விசாரித்து வரும் நீதவான், விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக பிரதான தொல்லியல் நிபுணரின் அண்மைய

trump carney 12555555

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டுமாறு தனிப்பட்ட கூட்டத்தில் கனடா பேச்சுவார்த்தையாளர்கள் வலியுறுத்தல்-இரகசியக் கூட்டத்தில்

November 20, 2026

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டுமாறு தனிப்பட்ட கூட்டத்தில் கனடா பேச்சுவார்த்தையாளர்கள் வலியுறுத்தல்-இரகசியக் கூட்டத்தில் ஒட்டாவா / நவம்பர் 20,

carney trump1111

கனடா–அமெரிக்கா வர்த்தகப் பேச்சுக்கள் சூடுபிடிக்கும் நிலையில், கனடா அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்த ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர்

November 20, 2026

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிரேஷ்ட ஆலோசகர்

heal

இன்புளுவென்சா வைரஸ் பரவல் குறித்து சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை

November 20, 2026

இலங்கையில் இன்புளுவென்சா சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளிட்ட

915548455_1673013157557264_8006156815667786714_n

யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!

November 20, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம்

Namal-750x422

எயார்பஸ் (Airbus) வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு; டிசம்பர் 2 வரை விளக்கமறியல் நீடிப்பு

November 20, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், ஸ்ரீலங்கா

maveerar thu22

எந்தத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் வழமை போன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்..! ஏற்பாட்டாளர்கள் உறுதி

November 20, 2026

யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி

Sajith-Premadasa-4

அரசாங்கம் தற்போது தொழில்சங்க தலைவர்களை இலக்குவைத்து செயற்படுகின்றது – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன- சஜித்

November 20, 2026

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் குரல்களை அரசாங்கம் நாளுக்குநாள் நசுக்கிவருவதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச நாடாளுமன்றத்தில் அவர்களின் ஒலிவாங்கிகள் செயல்இழக்கச்செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Chemmani_6

செம்மணி மனிதப் புதைகுழி: என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அப்பாற்பட்டவை – நீதிபதி எஸ். லெனின்குமார்

November 20, 2026

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பல என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அமையப் புதைக்கப்படவில்லை என்பது வெளிப்படையானது என யாழ்ப்பாண

viji

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை?

November 20, 2026

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே அந்த

ambin

மரணித்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை – அம்பிகா சாமுவேல்

November 20, 2026

மரணித்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நாட்டின் இறைமைக்கும் தேசிய ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த