இன்புளுவென்சா வைரஸ் பரவல் குறித்து சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை

இலங்கையில் இன்புளுவென்சா சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் தொற்று தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் பிரிவினர்
பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் அல்லது பேசும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் இந்தத் தொற்று இலகுவில் பரவும் என்று சிரேஷ்ட விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

திடீரெனத் தோன்றும் காய்ச்சல், குளிர், தொடர்ச்சியான இருமல் மற்றும் அதிக சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

சிலருக்கு நிமோனியா போன்ற தீவிர சுவாசப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்றும் அவர் எச்சரித்துள்ளார். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், ஆஸ்துமா, சிறுநீரக நோய் உள்ளவர்கள் இந்தத் தொற்றால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் பிரிவினராக உள்ளனர்.

அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்தல் மற்றும் சுயமாக மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறுதல் ஆகிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பொதுவாக மே – ஜூலை மற்றும் நவம்பர் – ஜனவரி ஆகிய காலப்பகுதிகளில் இன்புளுவென்சா பாதிப்பு அதிகரித்துக் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

heal

இன்புளுவென்சா வைரஸ் பரவல் குறித்து சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை

November 20, 2026

இலங்கையில் இன்புளுவென்சா சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளிட்ட

915548455_1673013157557264_8006156815667786714_n

யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!

November 20, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம்

Namal-750x422

எயார்பஸ் (Airbus) வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு; டிசம்பர் 2 வரை விளக்கமறியல் நீடிப்பு

November 20, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், ஸ்ரீலங்கா

maveerar thu22

எந்தத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் வழமை போன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்..! ஏற்பாட்டாளர்கள் உறுதி

November 20, 2026

யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி

Sajith-Premadasa-4

அரசாங்கம் தற்போது தொழில்சங்க தலைவர்களை இலக்குவைத்து செயற்படுகின்றது – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன- சஜித்

November 20, 2026

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் குரல்களை அரசாங்கம் நாளுக்குநாள் நசுக்கிவருவதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச நாடாளுமன்றத்தில் அவர்களின் ஒலிவாங்கிகள் செயல்இழக்கச்செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Chemmani_6

செம்மணி மனிதப் புதைகுழி: என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அப்பாற்பட்டவை – நீதிபதி எஸ். லெனின்குமார்

November 20, 2026

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பல என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அமையப் புதைக்கப்படவில்லை என்பது வெளிப்படையானது என யாழ்ப்பாண

viji

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை?

November 20, 2026

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே அந்த

ambin

மரணித்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை – அம்பிகா சாமுவேல்

November 20, 2026

மரணித்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நாட்டின் இறைமைக்கும் தேசிய ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த

in

இன்று சர்வதேச குழந்தைகள் தினம்

November 20, 2026

உலக நாடுகள் குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன. இருந்தாலும் சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ந்தேதி

kad

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான தீ விபத்து மேலதிக தகவல்கள் வௌியான!

November 20, 2026

கடுவலை நகர மத்தியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலின் போது, நச்சு புகையை சுவாசித்தமையால்

strike

முக்கிய சேவைகள் இன்று முடக்கம்!

November 20, 2026

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று

5

வைத்தியர்கள் அல்லாத சுமார் 40 ஆயிரம் பேர் மருந்து வழங்குகின்றனர்

November 20, 2026

நாட்டில் வைத்தியர்கள் அல்லாத சுமார் 40 ஆயிரம் பேர் மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலைமை பொதுச் சுகாதாரத்தில்