சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை – ஆளுநர்.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல், காணி மோசடி, மணல் மற்றும் மரக் கடத்தல், வாள்வெட்டுக் குழுக்களின் மீள் தலைதூக்கல், வீதி விபத்துகள் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸாரும் அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (18.11.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைக் காக்க வேண்டும்
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், பொலிஸ் திணைக்களத்தின் உயர் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும், சில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கீழ்நிலைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குத் துணைபோவதாகப் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகத் தெரிவித்தார்.
சில உத்தியோகத்தர்களின் இத்தகைய செயற்பாடுகள் ஒட்டுமொத்தப் பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரையும் பாதிப்பதுடன், நேர்மையாகப் பணியாற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, இவ்விடயத்தில் வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் விசேட கவனம் செலுத்தி, குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

May be an image of one or more people and text

 

காணி மோசடி, மணல் மற்றும் மரக் கடத்தலைக் கட்டுப்படுத்த விசேட கவனம்

வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். அதிகளவான தனியார் காணிகள் காணப்படும் யாழ்ப்பாணத்தில், உறுதிப் பத்திரங்களை மோசடியாகத் தயாரித்து அல்லது வெளிப்படுத்தல் உறுதி மூலம் காணிகளை விற்பனை செய்வதும், உரிமைகளைச் சட்டவிரோதமாக மாற்றுவதும் இடம்பெறுவதாகத் தெரிவித்தார். இத்தகைய மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
காணி மோசடியில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் சிலருக்குப் பொலிஸாருடன் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இத்தகைய முறைப்பாடுகள் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்றார். பதிவாளர் நாயகத்துடன் ஏற்கெனவே நடைபெற்ற கலந்துரையாடலில், போலி உறுதிப் பத்திரங்கள் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகளின் கையொப்பங்களை உறுதிப்படுத்திப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதன் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
சட்டவிரோத மணல் அகழ்வு, போக்குவரத்து மற்றும் மரக் கடத்தல் தொடர்பிலும் ஆளுநர் கவலை வெளியிட்டார். குறிப்பாகப் பளை, கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளின் ஊடாக இத்தகைய கடத்தல்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இச்செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும், கடத்தல்களைத் தடுக்க முற்பட்ட சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்விடயங்களில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விவரங்களைத் தனிப்பட்ட முறையில் வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். மேலும், எழுதுமட்டுவாள் பகுதியில் பொலிஸ் காவலரணை மீண்டும் நிறுவுவதற்கும், அப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்குமான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் பணிப்புரை விடுத்தார்.
வாள்வெட்டுக் குழுக்கள் உள்ளிட்ட மோதல்களில் ஈடுபடும் சில தரப்புகள் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இத்தரப்புகள் மீளச் செயற்படுவதற்கான முயற்சிகள் காணப்படுவதால் அவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றார். இக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுவதாகச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான விவரங்களையும் உயர் அதிகாரிகளிடம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
வீதிப் பாதுகாப்பு: 134 இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்கள்
வீதிப் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடியபோது, பிரதான வீதிகளில் வேகக் கட்டுப்பாட்டு அறிவிப்புப் பலகைகளைப் பொருத்துமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்தனர். இதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், பல்வேறு இடங்களில் இது தொடர்பான மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, வடக்கு மாகாணத்தின் ஆறு சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளுக்கு உட்பட்ட 134 இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்த வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். இக்கமராக்கள் வேகக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதுடன், குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் உதவும் எனக் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரிடம் விசேட கோரிக்கையை முன்வைப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
அண்மையில் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று, சாரதிகளிடம் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான திடீர் பரிசோதனைகளை வடக்கு மாகாணம் முழுவதிலும் பரவலாக முன்னெடுக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதற்குத் தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான ஆள்மாறாட்டம் மற்றும் பொலிஸாருடனான தொடர்புகள் குறித்த தகவல்களையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதிவேக மோட்டார் சைக்கிள்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கைப்பற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகவும் கால இடைவெளிகளில் மீண்டும் முன்னெடுக்குமாறும் ஆளுநர் பணித்தார். வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் திடீர் பரிசோதனைகளை நடத்துவதற்கும் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் உள்ளூராட்சி அமுலாக்கம்
அனுமதியற்ற கட்டட நீடிப்புகள், கட்டட மாற்றங்கள், அரச காணிகள் மற்றும் பொதுவீதிகள், நடைபாதைகள், வடிகால்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கட்டுமானங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடலில் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இத்தகைய சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்கள் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது பொலிஸார் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். எனினும், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் தமது அதிகார எல்லைக்குள் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாகப் பொலிஸில் முறையான முறைப்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், சில திணைக்களங்கள் தமக்குரிய பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஊடாக மண் மற்றும் மணல் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் விவரங்களைப் பொலிஸாருடன் பகிர்ந்துகொள்வது பயனுள்ளதாக அமையும் எனவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் அனுமதியற்ற வாகனங்களைக் கண்டறிந்து கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
புதிய வகைக் குற்றங்கள், பிச்சையெடுக்கும் செயற்பாடுகள் குறித்தும் ஆராய்வு
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் புதிய வடிவிலான பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். வீதியில் பயணிப்பவர்களின் வாகனத்தின் மீது திட்டமிட்டு மோதிவிட்டு, தமது கைத்தொலைபேசி அல்லது மோட்டார் வாகனம் சேதமடைந்துவிட்டதாகக் கூறி அவர்களிடம் இழப்பீடு கோரிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாக உதாரணங்களுடன் விளக்கினார். இத்தகைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸாரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.
மேலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிச்சையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், சுற்றுலாவிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது. இது திட்டமிட்ட குழுக்களால் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிச்சையெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் சாத்தியம் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த பொலிஸார், உள்ளூராட்சி மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட தொடர்புடைய திணைக்களங்களுடன் இணைந்து இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், பொது இடங்களிலிருந்து அவர்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் பிரச்சினைகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட பகுதிகளில் பொலிஸாரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பெண்கள் மீதான தொந்தரவுகள், குடும்ப வன்முறை, சிறுவர் துஷ;பிரயோகம் மற்றும் சுரண்டல் போன்ற விடயங்களும் கலந்துரையாடலில் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகளைக் கையாளும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணிகள், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான வசதிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அதேபோன்று, பொதுவிடங்களில் குப்பைகள் கொட்டுதல், திண்மக் கழிவுகளை உரிய முறையில் அகற்றாமை, குடியிருப்புப் பகுதிகளைப் பாதிக்கும் ஒலி மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட சுற்றாடல் பிரச்சினைகளும் ஆராயப்பட்டன. இவற்றைக் கட்டுப்படுத்தச் சுற்றாடல் அதிகார சபை, பொலிஸார் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது. கனரக வாகனங்கள் பாடசாலை நேரங்களில் பயணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான பொறிமுறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பொலிஸ் சேவையில் பொறுப்புக்கூறலும் ஒருங்கிணைப்பும் அவசியம்
பொலிஸ் நிர்வாகம் தொடர்பில், தமிழ்மொழி மூலம் சேவைகளைப் பெறுவதற்கான வசதிகள், தேவையான இடங்களில் மொழிபெயர்ப்பு ஏற்பாடுகள், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, நிலுவையிலுள்ள முறைப்பாடுகள், தீர்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, பதிலளிக்கும் காலம் போன்ற செயற்பாட்டு விபரங்களைத் தொடர்ந்து மீளாய்வு செய்வதன் அவசியம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுத்துதல், முறைப்பாட்டாளர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்ளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் முறைப்பாடுகளுக்குத் துரிதமாகப் பதிலளிப்பதுடன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தமது கீழ்நிலை உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளையும் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கிராம அலுவலர்களுக்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் இடையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடும் பிரதேச செயலக மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் பிராந்திய மட்டக் கலந்துரையாடல்களை மாதாந்தம் நடத்துவதற்கும் வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் முன்மொழிந்தார்.
மேலும், ஆளுநர் தலைமையில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒருங்கிணைப்புக் கலந்துரையாடலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்துவதுடன், தொடர்புடைய ஏனைய திணைக்களங்களின் பிரதிநிதிகளையும் அடுத்தடுத்த கூட்டங்களில் இணைத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டச் செயலாளர்கள், மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் மேலதிக மாவட்டச் செயலாளர்கள், வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் தொடர்புடைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

maveerar thu22

எந்தத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் வழமை போன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்..! ஏற்பாட்டாளர்கள் உறுதி

November 19, 2026

யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி

911567604_29153700577630542_1011494428587064568_n

தீவகத்தை சேர்ந்த தமிழ்தேசிய செயற்பாட்டாளர் மீது வாள்வெட்டு

November 19, 2026

தீவகத்தை சேர்ந்த தமிழ்தேசிய செயற்பாட்டாளர் கருணாகரன் குணாளன் அராலிச்சந்திக்கு அருகாமையில் இனந்தெரியாத கும்பலினால் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்

VWESQR3EMNFBNMBSA6B75K6YEE

ஒன்ராறியோவின் மிக இளம் வயது நகரத் தலைவரானார் 22 வயது ஐடன் கல்லியோனென்

November 19, 2026

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள எஸ்பனோலா (Espanola) நகரத்தின் புதிய மேயராக (நகரத் தலைவர்) 22 வயதான ஐடன் கல்லியோனென் (Aiden

TORONTO UNI

ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்கு ஒன்ராறியோ அரசாங்கம் $221 மில்லியன் நிதி ஒதுக்கீடு: 6,719 புதிய மாணவர் இடங்கள் உருவாக்கம்

November 19, 2026

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் (University of Toronto) மாணவர்களுக்கான புதிய இடங்களை உருவாக்குவதற்காக 221 மில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்யவுள்ளதாக

trump carney00

APEC உச்சிமாநாட்டின் இடையே மார்க் கார்னி – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு; ஆசிய முதலீடுகளுக்குக் கனடா அழைப்பு

November 19, 2026

சீனாவுடனான தனது வர்த்தக உறவுகளைக் கனடா தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக்

Chemmani_1

இன்று செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை!

November 19, 2026

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் தொல்லியல்

dt

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்புப் பேச்சு; ட்ரம்ப், புடின், ஷி ஜின்பிங் சந்திப்பு

November 19, 2026

சீனாவில் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்புப் பேச்சுக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்

cheran

ஈழத்தின் புகழ் பெற்ற கவிஞர் சேரன் காலமானார்

November 19, 2026

ஈழத்தின் முக்கியமான நவீன தமிழ் கவிஞர்களில் ஒருவரும், மகாகவி து. உருத்திரமூர்த்தியின் மகனுமான பேராசிரியர் சேரன் 66 ஆவது வயதில்

45

இலங்கையில் மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் என எச்சரிக்கை!

November 19, 2026

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம்

arrest

போலிச் சுற்றுலா வழிகாட்டி கைது

November 19, 2026

காலி – உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாக நடித்து, நாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியான

weli

வெலிக்கடை சிறையில் மூன்று மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

November 19, 2026

வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் மூன்று மாதப் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் தொண்டையில் சிக்கி

deng

டெங்கு மரணங்கள் 82 ஆக அதிகரிப்பு

November 19, 2026

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு