இலங்கையில் மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் என எச்சரிக்கை!

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொழும்புகே, கடந்த சில வருடங்களாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பொருளாதார வளர்ச்சி வேகம் 5% அளவில் இருந்தது. எனினும், இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து பேணிச் செல்வதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3% க்கும் 4% க்கும் இடைப்பட்டதாகக் காணப்படுவது புள்ளிவிபரங்களின் ஊடாகத் தெளிவாகின்றது.

அத்துடன், 2027, 2028, 2029 ஆகிய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3% வீதமாகக் குறையும். எனவே, இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கடினம் என்பது எமக்குத் தெளிவாகிறது.

அதேபோன்று, 8% வளர்ச்சி வேகமானது இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே கடந்து செல்லப்பட்டுள்ளது. அதாவது, 1978 ஆம் ஆண்டும், 2009 ஆம் ஆண்டு யுத்த நிலைமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2010 – 11 ஆம் ஆண்டுகளிலும் மீண்டும் 8% வளர்ச்சி வேகத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும், இவற்றைத் தொடர்ந்து பேணிச் செல்வது கடினமாக இருந்தது. கடந்த 40 – 50 வருடங்களைப் பார்த்தால், நாம் தொடர்ந்தும் எமது முதலீடுகளை அதிகரித்தோம். ஆனால், முதலீடுகளை அதிகரிக்க அதிகரிக்க நாம் அந்த வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொருளாதார வேகம் குறைகிறது. இன்றைய நிலையில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்துள்ளது.” என்றார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“1960 இல் தென்கொரியாவின் தனிநபர் வருமானம் 156 டொலராக இருந்தது. இலங்கையின் தனிநபர் வருமானம் 146 டொலராக இருந்தது. ஆனால் இன்று இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள்; தென்கொரியாவில் இன்று அது சுமார் 36,200 டொலராக உள்ளது. இலங்கையின் தனிநபர் வருமானம் கடந்த வருடம் 5,002 டொலராகும். அப்படியானால், தென்கொரியாவின் வருமானம் ஏழு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.

எமக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and Development) தொடர்பில் 10 ஆண்டுகளுக்கு முந்திய அறிக்கை அல்லது அவ்வாறான முறையான திட்டமொன்றை சுயேட்சையாக வகுத்துக் கொடுத்தது 2013 ஆம் ஆண்டாகும். அன்று அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று நாட்டின் நிலைமை முற்றிலும் மாறியிருக்கும். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமைக்கு எமது அரசியல் உறுதியற்ற தன்மையே காரணமாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் மாறுகின்றன. இதனால் எம்மால் ஒரு கொள்கையைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்வது கடினமாகியுள்ளது. அடுத்துவரும் அரசாங்கம் அதனை புதிதாக ஆரம்பிக்கின்றது. அரசியல் உறுதியற்ற தன்மை உண்மையில் பாரியதொரு பிரச்சினையாகும். திட்டமொன்றைக் கொண்டுள்ளபோது அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.” என்றார்.

maveerar thu22

எந்தத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் வழமை போன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்..! ஏற்பாட்டாளர்கள் உறுதி

November 19, 2026

யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி

911567604_29153700577630542_1011494428587064568_n

தீவகத்தை சேர்ந்த தமிழ்தேசிய செயற்பாட்டாளர் மீது வாள்வெட்டு

November 19, 2026

தீவகத்தை சேர்ந்த தமிழ்தேசிய செயற்பாட்டாளர் கருணாகரன் குணாளன் அராலிச்சந்திக்கு அருகாமையில் இனந்தெரியாத கும்பலினால் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்

VWESQR3EMNFBNMBSA6B75K6YEE

ஒன்ராறியோவின் மிக இளம் வயது நகரத் தலைவரானார் 22 வயது ஐடன் கல்லியோனென்

November 19, 2026

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள எஸ்பனோலா (Espanola) நகரத்தின் புதிய மேயராக (நகரத் தலைவர்) 22 வயதான ஐடன் கல்லியோனென் (Aiden

TORONTO UNI

ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்கு ஒன்ராறியோ அரசாங்கம் $221 மில்லியன் நிதி ஒதுக்கீடு: 6,719 புதிய மாணவர் இடங்கள் உருவாக்கம்

November 19, 2026

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் (University of Toronto) மாணவர்களுக்கான புதிய இடங்களை உருவாக்குவதற்காக 221 மில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்யவுள்ளதாக

trump carney00

APEC உச்சிமாநாட்டின் இடையே மார்க் கார்னி – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு; ஆசிய முதலீடுகளுக்குக் கனடா அழைப்பு

November 19, 2026

சீனாவுடனான தனது வர்த்தக உறவுகளைக் கனடா தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக்

Chemmani_1

இன்று செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை!

November 19, 2026

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் தொல்லியல்

dt

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்புப் பேச்சு; ட்ரம்ப், புடின், ஷி ஜின்பிங் சந்திப்பு

November 19, 2026

சீனாவில் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்புப் பேச்சுக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்

cheran

ஈழத்தின் புகழ் பெற்ற கவிஞர் சேரன் காலமானார்

November 19, 2026

ஈழத்தின் முக்கியமான நவீன தமிழ் கவிஞர்களில் ஒருவரும், மகாகவி து. உருத்திரமூர்த்தியின் மகனுமான பேராசிரியர் சேரன் 66 ஆவது வயதில்

45

இலங்கையில் மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் என எச்சரிக்கை!

November 19, 2026

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம்

arrest

போலிச் சுற்றுலா வழிகாட்டி கைது

November 19, 2026

காலி – உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாக நடித்து, நாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியான

weli

வெலிக்கடை சிறையில் மூன்று மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

November 19, 2026

வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் மூன்று மாதப் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் தொண்டையில் சிக்கி

deng

டெங்கு மரணங்கள் 82 ஆக அதிகரிப்பு

November 19, 2026

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு