எந்தத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் வழமை போன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்..! ஏற்பாட்டாளர்கள் உறுதி

யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது வேலணை பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன்தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்த தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் உணர்வெழுச்சியாக வழமை போன்று இம்முறையும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்கு தனிநபர் உரிமை கோரியுள்ளதுடன், தமது காணியில் மாவீரர் […]

தீவகத்தை சேர்ந்த தமிழ்தேசிய செயற்பாட்டாளர் மீது வாள்வெட்டு

தீவகத்தை சேர்ந்த தமிழ்தேசிய செயற்பாட்டாளர் கருணாகரன் குணாளன் அராலிச்சந்திக்கு அருகாமையில் இனந்தெரியாத கும்பலினால் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்

ஒன்ராறியோவின் மிக இளம் வயது நகரத் தலைவரானார் 22 வயது ஐடன் கல்லியோனென்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள எஸ்பனோலா (Espanola) நகரத்தின் புதிய மேயராக (நகரத் தலைவர்) 22 வயதான ஐடன் கல்லியோனென் (Aiden Kallioinen) செவ்வாய்க்கிழமை (17) இரவு பதவியேற்றுள்ளார். இதன் மூலம் ஒன்ராறியோ மாகாண வரலாற்றில் மிக இளம் வயதில் மேயரானவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஏற்கனவே ஒரு பதவிக்காலம் நகர சபை உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட கல்லியோனென், சுமார் 5,000 மக்கள் தொகையைக் கொண்ட எஸ்பனோலா நகரத்திற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து, கடந்த மாதம் […]

ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்கு ஒன்ராறியோ அரசாங்கம் $221 மில்லியன் நிதி ஒதுக்கீடு: 6,719 புதிய மாணவர் இடங்கள் உருவாக்கம்

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் (University of Toronto) மாணவர்களுக்கான புதிய இடங்களை உருவாக்குவதற்காக 221 மில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்யவுள்ளதாக ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் மூலம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM), சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சித் திட்டங்களில் (Trade programs) 6,719 மேலதிக மாணவர் இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. ஒன்ராறியோ மாகாணம் முழுவதிலுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 1.7 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் மாகாண அரசின் […]

APEC உச்சிமாநாட்டின் இடையே மார்க் கார்னி – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு; ஆசிய முதலீடுகளுக்குக் கனடா அழைப்பு

சீனாவுடனான தனது வர்த்தக உறவுகளைக் கனடா தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் இடையே கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சந்திப்பின் முக்கிய விவரங்கள்: வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை: சந்திப்பிற்குப் பின்னர் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, “சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் கனடாவின் மொழிகள், கலாச்சாரம், இறையாண்மை ஆகியவற்றிற்கு […]

இன்று செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கை தொடர்பில் காரசாரமான கருத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து முன்னிலையாகவுள்ள சட்டத்தரணிகள் முன் வைக்கும் சாத்தியம் உண்டு. அதேவேளை கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி வழக்கில், செம்மணி புதைகுழி தொடர்பான முக்கிய சாட்சியமாக கருதப்படும் கிரிசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் […]

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்புப் பேச்சு; ட்ரம்ப், புடின், ஷி ஜின்பிங் சந்திப்பு

சீனாவில் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்புப் பேச்சுக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர். ஒரு வருடத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், ட்ரம்பும் புடினும் நேற்று புதன்கிழமை நேரில் சந்தித்துள்ளனர். ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் ஷென்சென் நகரைச் சென்றடைந்தபோது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் […]

ஈழத்தின் புகழ் பெற்ற கவிஞர் சேரன் காலமானார்!

ஈழத்தின் முக்கியமான நவீன தமிழ் கவிஞர்களில் ஒருவரும், மகாகவி து. உருத்திரமூர்த்தியின் மகனுமான பேராசிரியர் சேரன் 66 ஆவது வயதில் காலமானார்.  இன்றுஉடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர்  நவம்பர் 18ஆம் திகதி கனடாவின் ரொரண்டோவில் காலமானார். 1960ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், அளவெட்டியில் பிறந்த சேரன், சிறுவயதில் இருந்தே இலக்கிய சூழலில் வளர்ந்தவர். அவரது தந்தை மகாகவி உருத்திரமூர்த்தி ஈழ தமிழ் கவிதை உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவராவார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற […]

இலங்கையில் மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் என எச்சரிக்கை!

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொழும்புகே, கடந்த சில வருடங்களாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பொருளாதார வளர்ச்சி வேகம் 5% அளவில் இருந்தது. எனினும், இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து […]

போலிச் சுற்றுலா வழிகாட்டி கைது

காலி – உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாக நடித்து, நாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெண் ஒருவருக்குத் தொல்லை கொடுத்து, தாக்கி, பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 05 ஆம் திகதி சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வருகை தந்து, உனவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 40 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் […]