போலிச் சுற்றுலா வழிகாட்டி கைது

காலி – உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாக நடித்து, நாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெண் ஒருவருக்குத் தொல்லை கொடுத்து, தாக்கி, பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 05 ஆம் திகதி சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வருகை தந்து, உனவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 40 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் […]

வெலிக்கடை சிறையில் மூன்று மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் மூன்று மாதப் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக விரிவான அறிக்கை ஒன்றைக் கோருவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துடன் தொடர்புடைய அவசியமான தலையீடுகளை மேற்கொள்வதற்கும், அநாதை நிலை அல்லது இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதைக் குறைத்துக் கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகளை […]

டெங்கு மரணங்கள் 82 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 29 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்தன என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதம் அவமதிப்பு: ஞானசாரருக்கு விதிக்கப்பட்ட 4 வருட கடூழிய சிறை உறுதி

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தனக்கு கடந்த 2024ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து, விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கிருலப்பனையில் கடந்த 2016 மார்ச் 30ஆம் திகதி, நடைபெற்ற ஊடகவியலாளர் […]

நீதிமன்ற வைப்பறையில் திருட்டு

மஹர நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் வைப்பறையில் வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் அடங்கிய உர மூடைகள் திருடப்பட்டுள்ளதாகக் கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேலியகொடை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய பெண்களுக்கான நீளமான காற்சட்டைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. நீதிமன்றப் பதிவாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், கடவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்​கொள்ளப்பட்டுள்ளது.