மஹர நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் வைப்பறையில் வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் அடங்கிய உர மூடைகள் திருடப்பட்டுள்ளதாகக் கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய பெண்களுக்கான நீளமான காற்சட்டைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
நீதிமன்றப் பதிவாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், கடவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.