செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி எதிர்பாராத பாரிய தோல்விகளைச் சந்தித்ததை அடுத்து, தங்கள் “கவனம் மாறவில்லை” என்று கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டனில் டிரம்ப்பின் அதிகாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, ஜனநாயக கட்சி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளனர்; அவர்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் பெரும்பான்மை வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக வர்த்தகப் போர் நீடித்து வரும் நிலையில், அதிகாரப் பகிர்வின் மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் என்னவென்பதை அறியக் கனடியர்கள் காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்த தேர்தல் முடிவுகள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு பாதிக்கும் என்பது புதன்கிழமை வரை தெளிவாகவில்லை.
இரு தரப்பினரும் இன்னும் ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை. பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.