அமெரிக்க செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம்!

மிச்சிகன் மாநிலத்தின் காலியாக உள்ள அமெரிக்க செனட் இடத்திற்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயத்  வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பிரதிநிதி என்ற வரலாற்றைப் படைத்துள்ள அவர், செனட் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான ஜனநாயகக் கட்சியின் போராட்டத்தில் முக்கியமான ஒரு இடத்தையும் தக்கவைத்துள்ளார். கடும் போட்டி நிறைந்த இத்தேர்தலில் எல்-சயதின் வெற்றி, ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு பிரிவுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. மேலும் ஓய்வுபெறும் ஜனநாயகக் […]

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை (Protection of the State from Terrorism) உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கட்டுநாயக்க அவறிவத்த நகரில் நேற்று (04) மாலை 5 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிவரும் அரசாங்கம், அதற்குப் பதிலாகப் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவர முயற்சிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். புதிய சட்டமூலத்தில் பாதுகாப்புச் செயலாளருக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல், […]

பிற நாடுகளின் கடல் எல்லைகளில் கைதான 795 மீனவர்களில் 753 பேர் 66 படகுகளுடன் விடுவிப்பு

பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை 145 மீன்பிடிப் படகுகளுடன் 795 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 753 மீனவர்கள் 66 மீன்பிடிப் படகுகளுடன் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் […]

துமிந்தவுக்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு…

அண்மையில் வீட்டுத் தொகுதியொன்றில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்காக எதிர்வரும் 23ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐகுல் ஷெரகசினா என்ற கசகஸ்தான் நாட்டுப் […]

இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் காங்கிரஸின் செனட் சபையின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஜனநாயகக் கட்சியால் முடிந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுக் கட்சியை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியே இந்த வெற்றியைப் அந்தக் கட்சிப் பெற்றுள்ளது. இது ஜனாதிபதி ட்ரம்ப் மீதான மக்கள் அபிப்பிராயத்தின் ஒரு சோதனையாகவே கருதப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தின் மக்கள் பிரதிநிதிகள் அந்நாட்டின் காங்கிரஸ் சபையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர்.  

பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை […]

பிரான்ஸில் இரத்த வங்கிகள் மீது சைபர் தாக்குதல்

பிரான்ஸில் உள்ள மூன்று பிராந்திய இரத்த வங்கிகளின் குளிர்சாதனப் பெட்டிகளைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் இரத்த விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பிரான்ஸ் இரத்த நிறுவனம் (EFS) தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்த எச்சரிக்கை கிடைத்ததும், பணியாளர்கள் இரத்தப் பொதிகளை இணையத்துடன் இணைக்கப்படாத மாற்றுக் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு மாற்றியுள்ளனர். இதேவேளை, ஐரோப்பாவின் எட்டு நாடுகளில் உள்ள பல்பொருள் […]