இலங்கையின் முன்னணி வங்கிகள் இரண்டில் பெருந்தொகையான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரு வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொட்டாஞ்சேனை மற்றும் கஹவத்த ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வங்கி நிதி நிறுவனங்களின் கிளை முகாமையாளர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.